திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்
இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நவம்பர் 13) முதல் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Train No. 06001 Chennai Egmore Tirunelveli Superfast Festival Special Fare Special will leave Chennai Egmore at 23.55 hrs on 17th November, 2023 (Friday) and reach Tirunelveli at 12.45 hrs, the next day (1 Service)@SRajaJourno | @LPRABHAKARANPR3 | @abpanandatv | @k_for_krish .. pic.twitter.com/wPUg5Kge4k
— arunchinna (@arunreporter92) November 17, 2023
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை 18ம்தேதி நடக்கிறது. 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகம், விடுதிகள், தனியார் விடுதிகள், சமுதாய விடுதிகளில் தங்கியிருந்து விரதமிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த விழா நடக்கும் 7 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்தாண்டை போலவே இந்தாண்டும் கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.