மேலும் அறிய
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணியசாமி கோயில் தெப்ப உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தெப்ப குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தெப்ப உற்சவம்
தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் சிவசுப்பிரமணியசாமி கோயில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் தைப்பூச பால்குட ஊர்வலம், சாமி திருக்கல்யாண உற்சவம், விநாயகர் தேரோட்டம், சிவசுப்பிரமணிய சாமி தேரோட்டம், விழா கொடியிறக்கம், பல்லக்கு உற்சவம் ஆகியவை நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தெப்ப குளத்தில் 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்ப பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















