மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் அஷ்டபுஜ பெருமாள் கோவில் கருட சேவை..! கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்..!
Shri Ashtabhuja Perumal Temple: ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் கருட சேவை உற்சவம்.
ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்டa திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் மற்றும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. இந்நிலையில் இத்திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாத இருந்த நிலையில் தற்போது மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த வருடம் நடைபெறுகிறது.
நேற்று முன் தினம் கோவிலில் சித்திரை மாத பெருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உற்சவர் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார். உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று காலை அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு ரோஸ் நிற பட்டுடுத்தி திரு ஆபரணங்கள் அணிந்து கருட சேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கருட சேவை
கோவிலில் இருந்து புறப்பட்ட கருட சேவை ரங்கசாமி குளம், டி.கே.நம்பி தெரு, செட்டி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழியெங்கும் பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர். தற்பொழுது கோடை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வீதி தோறும் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion