ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழா
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் ஐப்பசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சார்பாக சிறப்பாக செய்திருந்தார்.
கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழா.
கரூர் நகரப் பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கு பட்டாளை உடுத்தி, வந்த மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
அதை தொடர்ந்து சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.