மேலும் அறிய

Sabarimala Temple: மண்டல, மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயிலில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் நெறுங்குவதால் பக்தர்களுக்காக நிலக்கல்லில் மட்டும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலையில் 25 லட்சம் டின் அரவணை, அப்பம் தயாரித்து இருப்பு வைக்க நடவடிக்கை. நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மண்டல பூஜை காலத்தில் 25 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

Sabarimala Temple: மண்டல, மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயிலில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் தினமும் பூஜை நடைபெறும். இந்த சீசனையொட்டி சாமி தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன் எருமேலி, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நேரில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐயப்ப பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்படும். குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,500 வாகனங்கள் எருமேலியிலும், 2,000 வாகனங்கள் நிலக்கல் பகுதியிலும் கூடுதலாக நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. நிலக்கல்லில் மட்டும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் 540 கழிப்பிட வசதி, நிலக்கல்லில் 1,120 கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. மண்டல காலத்தில் 25 லட்சம் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sabarimala Temple: மண்டல, மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயிலில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

பம்பை, அப்பச்சி மேடு, சன்னிதானம் உள்பட பக்தர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நடைபாதைகளிலும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும். சன்னிதானத்தின் பல்வேறு இடங்களில் 1,005 கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 18 அரங்குகளில் 3,600 பேர் ஓய்வு எடுக்க வசதி செய்து உள்ளோம். நிலக்கல்லில் 7 ஆயிரம் பேர் தங்கி ஓய்வு எடுக்க விசாலமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 24 மணி நேரமும் சுக்கு நீர் வழங்க 60 மையங்கள் செயல்படும். சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை கியூ மண்டபத்தில் காத்து நிற்கும் பக்தர்களுக்கு சுக்கு நீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
EPS On BJP: விஜய் வரணும்.. குஷிப்படுத்த பாஜககாரங்க பேசிக்கிறாங்க, அதிமுகவில் சீமான்? - எடப்பாடி பேச்சு
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
VP Jagdeep Resign: வேலையை காட்டிய பாஜக? முதல்முறை ”யாருக்கோ பிடிக்கல” ஜெகதீப் தன்கர் ராஜினாமா பின்புலம்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 22.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
TN Power Cut ; தமிழகத்தில் இன்று ( 22.07.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
MG M9 Electric MPV: பெருசா, சொகுசா.. இதென்னா சீட்டா? பெட்டா? 7 சீட்டர் EV, வண்டி ஓடாது மிதக்கும் போலியே..
MG M9 Electric MPV: பெருசா, சொகுசா.. இதென்னா சீட்டா? பெட்டா? 7 சீட்டர் EV, வண்டி ஓடாது மிதக்கும் போலியே..
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று கரண்ட் கட்;  உங்க ஏரியாவுல கரண்ட் கட் ஆகுமா? உடனே செக் பண்ணுங்க!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று கரண்ட் கட்; உங்க ஏரியாவுல கரண்ட் கட் ஆகுமா? உடனே செக் பண்ணுங்க!
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Jagdeep Dhankhar Resign: பெரும் அதிர்ச்சி! குடியரசுத் துணைத்தலைவர் திடீர் ராஜினாமா - ஜெகதீப் தன்கருக்கு என்னாச்சு?
Embed widget