Purattasi Month: புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா..? ஆன்மீகமா..? ஆரோக்கியமா..?
Purattasi Month: புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு உண்ணாமல் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது.
தமிழ் மாதங்களிலே பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புரட்டாசி மாதம் நாளை பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறக்கிறது என்றாலே வீடுகளில் அசைவ உணவுகள் இருக்காது என்பதால் அசைவப் பிரியர்கள் அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாவார்கள். மேலும், வீடுகளில் புரட்டாசி மாதங்களை முன்னிட்டு ஏராளமான விரதங்களையும், பூஜைகளையும் மக்கள் மேற்கொள்வார்கள்.
புரட்டாசி மாதம் பிறந்தால் மட்டும் அசைவ உணவுகளுக்கு ஏன் தடை விதிக்கப்படுகிறது? என்று நம்மில் பலருக்கும் கேள்வி எழும். அதற்கான பதிலை கீழே விரிவாக காணலாம்.
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு ஆன்மீக காரணங்களை காட்டிலும் பருவ நிலை மாற்றமே பிரதான காரணம் ஆகும். பொதுவாக, புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம் ஆகும். புரட்டாசிக்கு முந்தைய மாதங்களில் நன்கு கொளுத்திய வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். இவ்வாறு நடப்பதால் பூமியில் உஷ்ணம் பிறக்கும்.
மேலும் படிக்க : Navaratri 2022:நவராத்திரியின் முதல் நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரை அம்மனுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியங்கள்
இந்த உஷ்ணமானது ( சூடு) வெயில் காலத்தில் கொளுத்தும் வெப்பத்தை காட்டிலும் உடலுக்கு மோசமானது. இது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். இந்த மாறுபட்ட காலநிலை ஏற்படும் சூழலில், அசைவ உணவுகளை சாப்பிடுவதால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த கால சூழலில் அசைவ உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதுமட்டுமின்றி, சரிவரி பெய்யாத மழை மற்றும் திடீர் வெப்ப மாறுதலால் நோய்க்கிருமிகள் உருவாகும். இந்த கால சூழலில் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் உடலுக்கு ஏற்படும். இந்த சூழலில், அசைவ உணவுகள் எடுத்துக்கொண்டால் அது உடல்நலத்தை மேலும் பாதிக்கும். இதன் காரணமாக, புரட்டாசி மாதத்தில் சைவ உணவுகள் எடுத்துக்கொண்டால் நமது ஆரோக்கியம் சீராக இருக்கும்.
துளசிக்கு மேற்கண்ட சிக்கல்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இயற்கையாகவே உண்டு. இதன்காரணமாகவே, கோவில்களில் தீர்த்தங்களில் துளசியை கலந்து பக்தர்களுக்கு கொடுப்பது வழக்கம்.இதன் காரணமாகவே, புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு உண்ணாமல் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது. அசைவ உணவுகளை ஒதுக்கி புரட்டாசியில் சைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் நலன் ஆரோக்கிமாக இருக்கும்.
மேலும் படிக்க : Purattasi Viratham: புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன..? முழு விவரம் உள்ளே..!
மேலும் படிக்க : Purattasi Viratham: புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் என்னென்ன பலன்கள் தெரியுமா..?