மேலும் அறிய

போடி சிவாலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

புரட்டாசி மாதம் முதல் மஹாளயபட்ச அமாவாசை  நாளில் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.

புரட்டாசி அமாவாசை வழிபாடு

மாதந்தோறும் வரும் அமாவாசை காலங்களில் முன்னோர்களை நினைத்து பொதுமக்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று எள்ளை நீரில் கரைத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இந்த நிலையில் இந்த வருடம் புரட்டாசி மாதம் முதல் மஹாளயபட்ச அமாவாசை  நாளில் புனித ஸ்தலங்களில் தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடினர்.

Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்

போடி சிவாலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக நீர் நிலைகளில் கூடிய மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தனர். போடியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிவபெருமானுக்கு ஆத்ம தீப பூஜை நடைபெற்றது. பக்தர்கள் இறந்த முன்னோர்களுக்கும்,தாய் தந்தையர்க்கும் ஆத்மா சாந்தியடைய ஆத்மா தீப பூஜை கலந்து கொண்டனர். பூஜைகள் பக்தர்கள் பூசணி, வாழை காய்கறிகள் ,வெள்ளம் ,பச்சரிசி, அகத்திக்கீரைகளை வாங்கி வந்து சிவபெருமானுக்கு முன் வைத்து பூஜை செய்த பின் தானம் செய்தனர். காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி காசி விசுவநாதர் கோயில் ,வீரபாண்டி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள்  தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி பெறவும் அவர்கள் ஆசீர் பெறவும் தர்ப்பபுல்  கொண்டு பிரார்த்தனை செய்து ஆசீ பெற்றனர்.

அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு

போடி சிவாலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு

குறிப்பாக மகளாயஅமாவாசையை முன்னிட்டு போடி அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தமிழக கேரளாவை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிச்சாங்கரை என்ற அடர்ந்த வனப் பகுதியில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பழமையான ஸ்ரீ கைலாய மேல சொக்கநாதர் , ஸ்ரீ கைலாய கீழ சொக்கநாதர் , கோவில் உள்ளன இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை பிரதோஷம் சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?

போடி சிவாலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

புராட்டாசி மாகளாய அமாவாசையை முன்னிட்டு சிவாலயத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு , பூ ,ருத்ராட்சம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றன.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு சென்றனர். தங்களின் முன்னோர்கள்  நினைத்து  ஆத்ம தீபத்தை ஏற்றி சிவனை வழிபட்டு சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget