காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்: காவல்துறை அதிரடி கட்டுப்பாடுகள்! பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
"காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்படுகளில் விதித்துள்ளது"

"காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது"
காவல்துறையினர் முக்கிய அறிவிப்பு
காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புகழ்பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் 08.12.2025 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இக்கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 2,00,000 பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது.
மேலும், இக்கும்பாபிஷேக பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 750 காவல்துறையினருடன் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கவனத்திற்கு
^ இத்திருவிழா நாளில் குழந்தைகள் மற்றும் வயது முதயோர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அழைத்துச் செல்பவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
> பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
~ மாநகராட்சியின் சார்பில வீதிகளில் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
~ குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
> நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவிழா நடைபெறும் நாளில் திருக்கோயிலை இடங்கள் மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
> மருத்துவக குழு சார்பில் கோயில் உட்புறம் மற்றும் வெளிபுறத்தில் மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 08.12.2025 அன்று அதிகாலை 02.00 மணிமுதல் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்கள் வழியாக வந்துசெல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நகரத்திற்கு வரும் பேருந்துக்கள் வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை, குஜராத்திசத்திரம் புத்தேரி தெரு ஜங்சன் கச்சபேஸ்வரர் கோயில் வழியாக, காஞ்சிபுரம் பேருந்துநிலையம் வந்தடையும்.
காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து சென்னை மற்றும் வேலூர் செல்லும் பேருந்துகள் டவுன் பேங்க், பூக்கடைச்சத்திரம், கம்மாளத் தெரு மற்றும் பொன்னேரிகரை வழியாக செல்லும்.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்களில கோவிலுக்கு வரும் பக்தர்கள் கீழ்கானும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.
° யாத்திரி நிவாஸ் (ஒலிமுகமதுப்பேட்டை)
• உலகலந்த பெருமாள் கோயில் அருகில
• SSKV பள்ளி வளாகம்
• மெக்லின் மைதானம்
·புதிய இரயில் நிலையம்
· சோழன் பள்ளி வளாகம்
கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று கம்மாளத் குஜராத்திசத்திரம் முதல் தெரு சந்திப்பு வரையும், சங்கரமடம் முதல் கச்சபேஷ்வரர் கோயில் வரையும் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு, தேரடி தெரு, பெருமாள் தெரு, கிழக்கு மாடவீதி ஆகிய இடங்களில் இருசக்கரம், நான்கு சக்கரம் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை மேற்படி வாகனங்களை ஒதுக்கப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்திலேயே(Parking) நிறுதத வேண்டும். மேலும் போக்குரவத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு வழியாக மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபடுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று (08.12.2025) பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.





















