மேலும் அறிய

Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?

Panguni Uthiram 2026: பங்குனி உத்திரம் நன்னாளில் கோயிலில் வழிபட வேண்டிய நேரம் என்ன? வழிபட வேண்டிய முறை எப்படி? என்பதை கீழே காணலாம்.

பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும் உத்திரம் நட்சத்திரம் சேரும் நாளே பங்குனி உத்திரம் எனப்படுகிறது. இந்த நாள் இந்து சமயத்தில் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக முருகன், பார்வதி – சிவன், ஆண்டாள் – ரங்கநாதர் ஆகிய தெய்வங்களின் திவ்ய திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. 

ஏப்ரல் 1ம் தேதி காலை 7.45மணிக்கு மேல் தெய்வ வழிபாடு ஆரம்பித்து மாலை 4.20 வரை சிறப்பாக வழிபாடு செய்ய செய்ய உகந்த நேரம் ஆகும்.

திருமணம்:

இந்த நாளில் தெய்வங்களுக்கு திருமண விழா நடத்துவது மிக முக்கியமான வழிபாடாகும். தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். குறிப்பாக பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம்:

தம்பதியரின் ஒற்றுமை மற்றும் குடும்ப நல்லிணக்கம் அதிகரிக்கும்
திருமணத் தடை நீங்கும்
மன அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சி கிடைக்கும்
புண்ணிய பலன் அதிகரிக்கும்

இந்த நாளில் விரதம் இருந்து, கோயிலுக்கு சென்று தெய்வங்களை வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக முருகன் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

வழிபடுவது எப்படி?

காலை சுத்தமாக குளித்து விரதம் இருக்க வேண்டும்.
சிவன் மற்றும் முருகன் கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்.
பால், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்ய வேண்டும்.
திருமண தடை உள்ளவர்கள் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யலாம்.

புனித நாள்:

மேலும், இந்த நாளில் “ஓம் சரவணபவா” அல்லது “ஓம் நமசிவாய” எனும் மந்திரங்களை ஜபிப்பது நல்ல பலனை தரும். முடிவாக, பங்குனி உத்திரம் என்பது ஆன்மிக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் மிகுந்த நன்மைகளை தரும் புனித நாள். இந்த நாளில் பக்தியுடன் வழிபட்டால் வாழ்க்கையில் அமைதி, வளம் மற்றும் நலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமையே பல கோயில்களில் கொடியேற்றப்பட்டுவிட்டது. 

பங்குனி உத்திரம் நன்னாளில் முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் அறுபடை வீடுகளில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் என்பதால் அங்கும் பக்தர்கள் வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வைணவ தலங்களிலும் பங்குனி உத்திர வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் ஆழ்ந்த பக்தர்கள்!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் பக்தர்கள்!
ஏன் பெருமாளை
ஏன் பெருமாளை "மலையப்பர்" என்று அழைக்கிறார்கள்? ஏழுமலைகள் சொல்லும் ஆன்மிக ரகசியம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
Embed widget