Palani Temple: பழனி முருகன் கோயில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை எவ்வளவு? - வசூல் நிலவரம் இதோ
தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 45 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 18 கிலோ 965 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 8, 9-ந் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இந்தநிலையில் கோவிலில் உள்ள அன்னதான மற்றும் நவதானிய உண்டியல்கள் நிரம்பியது. இதையடுத்து அவற்றை திறந்து அதிலுள்ள காணிக்கை பொருட்களை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி உண்டியல்களில் இருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள், நவதானியங்கள் ஆகியவை கோவில் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்பட்டன.
Actor Sarath Babu Funeral: திரண்ட ரசிகர்கள்.. பிற்பகல் 2 மணிக்கு நடிகர் சரத்பாபு உடல் நல்லடக்கம்...
இந்த பணிக்கு பணிக்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
TN 10th & 11th Supplementary Exams: 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி? முழு விவரம்..
Sepsis: சரத்பாபு உயிரிழப்புக்கு காரணம் செப்சிசா..? அப்படி என்றால் என்ன? தப்பிப்பது எப்படி?
உண்டியல் காணிக்கை மூலம் ரூ.54 லட்சத்து 36 ஆயிரத்து 192 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 76 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 45 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 18 கிலோ 965 கிராம் ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. நவதானியங்களும் காணிக்கையாக கிடைத்தன.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்