Palani Temple Collection: பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை - 2 நாட்கள் வசூல் நிலவரம் இதோ
Palani Temple Hundi Collection:: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இரண்டு நாட்களாக எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை 4 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 373 கிடைத்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 20, 21, 22-ந் தேதிகளில் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 48 நாட்கள் மண்டலபூஜை நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. பக்தர்கள் கூட்டம் காரணமாக கடந்த 30 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியது.
அதன்பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. பழனி மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடந்தது. முன்னதாக உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டது.
Erode East Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதையடுத்து இரண்டு நாட்களாக உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கை வரவாக ரொக்கம் ரூபாய் 4 கோடியே 80 இலட்சத்து 57 ஆயிரத்து 373 கிடைத்துள்ளது. தங்கம் 2270 கிராமும், வெள்ளி 40246 கிராமும், வெளிநாட்டு கரன்சி 1455 நோட்டுகளும் கிடைத்துள்ளது.
Yeddyurappa: ஹெலிகாப்டரில் தரையிறங்கிய முன்னாள் முதலமைச்சர்.. குறுக்கே வந்த தெருநாய்கள் - அப்புறம் என்னாச்சு?
உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்