மேலும் அறிய

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு

அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், பரமபத வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

நகரேஷூ காஞ்சி என போற்றப்படும், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படுவதுமான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம்  ஸ்ரீ வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயிலில் இன்று  வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஆண்டிற்கு ஒரு முறை திறக்கப்படும் சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு
 
பரமபத வாசல் திறப்பதை ஓட்டி , அதிகாலையிலேயே காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, பரமபத வாசல் வழியாக சென்று லஷ்மி தேவியுடன் சயன கோலத்தில் ஸ்ரீ அரங்க நாத பெருமாளாக காட்சியளிக்கும் வைகுண்ட பெருமாளை,  பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா, என்று கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு
 
மேலும் ஆண்டுதோறும் சொர்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அஷ்ட புஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறவில்லை. அதனால் வைகுண்ட பெருமாள் திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி:

ஏகாதசி என்றால் 11வது நாள் என்று பொருள்படும். ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு பட்சங்களிலும் வரும் 11வது நாள் ஏகாதசி. இந்தத் திதி இறைவழிபாட்டுகே உரியது என்பது ஆன்றோர்கள் கருத்து. இந்நாட்களில் நம்மைக் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை தியானம் செய்திருந்தால் அவனருள் நிறைந்து மனம் புத்துணர்ச்சி கொள்ளும். மேலும் ஏகாதசி நாளில் நாம் வழிபாடு செய்தால் மனதின் விருப்பங்கள் நிறைவேறும் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு:

அந்த வகையில் ஏகாதசியின் தொடக்க நாளான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்புக்குப்பிறகு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளினார். தொடர்ந்து, அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதைதொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ஏழுமலையான் கோவில் சுமார் 4 டன் மலர்களாலும், வண்ண சரவிளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்:

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினர். அதன்பிறகு அதிகாலை 5.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget