மேலும் அறிய

Navratri 2024 9 Days: நவராத்திரி கொண்டாட்டம்! அம்மனுக்கு 9 நாளும் 9 பெயர், 9 நிறம் - முழு விவரம்

9 Days of Navratri Colour 2024: நவராத்திரியின் 9 நாட்களும் பக்தர்கள் அம்மனை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிற உடையில் அலங்கரித்து வழிபடுகிறார்கள்.

9 Colours of Navratri 2024 October: தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுதபூஜை, விஜயதசமி ஆகும். வட இந்தியாவில் நவராத்திரி பண்டிகையாக இது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவ என்றால் 9 என்று அர்த்தம். 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் இது நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.  அம்மனை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படம் இந்த பண்டிகையின் 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு பெயரில் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

நவராத்திரியின் ஒவ்வொரு ராத்திரிக்கும்  அம்மன் எந்த பெயரில் வணங்கப்படுகிறார்? என்பதை கீழே காணலாம்.

முதல் நாள்:

நவராத்திரியின் முதல் நாளில் நவதுர்க்கை வழிபாட்டில் அம்பிகை சைலபுத்திரி தேவியாக பக்தர்களால் வணங்கப்படுகிறார். நவராத்திரியின் முதல் நாளில் சைலபுத்திரியாக காட்சி தரும் அம்மனுக்கு சிவப்பு நிறத்தில் பட்டு அணிவிக்கப்படுகிறது.

2வது நாள்:

இரண்டாம் நாளில் அம்மன் பிரம்மசாரினியாக காட்சி தருகிறார். பக்தி மற்றும் தூய்மையை அடையாளப்படுத்தும் விதமாக பிரம்மசாரினி வணங்கப்படுகிறார். பிரம்மசாரினிக்கு உகந்த நிறமாக அடர்நீலம் கருதப்படுகிறது.

3வது நாள்:

நவராத்திரியின் 3வது நாள் அம்பிகை சந்திரகாந்தா வடிவமாக காட்சி தருகிறார். அமைதியின் வடிவமாக கருதப்படும் சந்திரகாந்தா தேவி மஞ்சள் நிறத்தில் அலங்கரித்து பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

4வது நாள்:

அம்பிகை நவராத்திரியின் 4வது நாளில் கூஷ்மாண்டா தேவியாக காட்சி தருகிறார். உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்கும் தாயாக கருதப்படுவதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த நாளில் அம்மனை பச்சை நிற பட்டு உடுத்தி வழிபட வேண்டும். இவர்  செல்வ செழிப்பை அருளும் தேவியாக கருதப்படுகிறாள்.

5ம் நாள்:

நவராத்திரியின் 5வது நாளில் அம்பிகை ஸ்கந்தமாதாவாக காட்சி தருகிறார். கந்த கடவுளின் தாய் அவதாரமாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று அழைக்கப்படுகிறார். இந்த நன்னாளில் சாம்பல் நிறத்தில் அம்மன் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

6வது நாள்:

நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகை காத்யாயனி வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். காத்யாயினி போர் தெய்வமாக காட்சி தருகிறார். பக்தர்களுக்கு தைரியத்தையும், வெற்றியையும் தருபவராக காத்யாயினி காட்சி தருகிறார். காத்யாயினி தேவி ஆரஞ்சு அல்லது காவி நிற பட்டுடுத்தி பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

7ம் நாள்:

அம்பிக்கை காளத்திரி தேவியாக நவராத்திரியின் 7வது நாளில் காட்சி தருகிறார். தெய்வீகத்தை உணர்த்தும் விதமாக காளத்திரி தேவியாக காட்சி தருகிறார். தெய்வீகத்தை உணர்த்தும் விதமாக காட்சி தரும் காளத்திரி தேவி வெற்ளை நிற ஆடையுடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

8வது நாள்:

நவராத்திரியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளான 8வது நாள் அம்மன் மகா கௌரியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்பு, கருணை வடிவத்தில் காட்சி தருவதால் இந்த பெயரில் வணங்கப்படுகிறார். இந்த நாளில் அம்மனை இளம் சிவப்பு நிறத்தில் அலங்கரித்து வழிபடுவார்கள்.

9வது நாள்:

நவராத்திரியின் கடைசி நாளான 9வது நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அம்பிகையை சித்திதாத்ரி என்ற பெயரில் இந்த நாளில் பக்தர்கள் வணங்குகிறார்கள். ஞானம், அறிவாற்றல் ஆகியவற்றை தருபவராக சித்திதாத்ரி கருதப்படுவதால் இந்த நாளில் ஊதா நிறத்தில் அம்மன் அலங்கரித்து வணங்கப்படுகிறார்.

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரியில் கோயில்களில் அம்மனுக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget