மேலும் அறிய

வைத்தீஸ்வரன் கோயிலில் தொடரும் பாரம்பரிய வழிபாடு : பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.

வைத்தீஸ்வரன்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற மிகவும் பழமைவாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். 


வைத்தீஸ்வரன் கோயிலில் தொடரும் பாரம்பரிய வழிபாடு : பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.

நகரத்தார் குலதெய்வ வழிபாடு

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வைத்தீஸ்வரன் கோயில் திரண்டுள்ளனர்.

நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை இங்கு வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 


வைத்தீஸ்வரன் கோயிலில் தொடரும் பாரம்பரிய வழிபாடு : பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.

1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்

இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாங்கள் வேண்டுகளுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வெப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


வைத்தீஸ்வரன் கோயிலில் தொடரும் பாரம்பரிய வழிபாடு : பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்.

தொடரும் அன்னதான திட்டம் 

வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை நகரத்தார் பாதயாத்திரையை முன்னிட்டு வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக திருக்கோயில் அலுவலகம் முன்பு நேற்று இன்று என இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வை, வைத்தீஸ்வரா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர், தலைவர், செயலர், பொருளாளர், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர், திருக்கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள், அறங்காவலர்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாக இவ்விழாவிற்கு வருகை தரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு இவர்கள் அன்னதானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?
அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதன் ஆன்மீக இரகசியங்கள் தெரியுமா உங்களுக்கு?
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Embed widget