மேலும் அறிய

Thirukadayur Amirthakadeshwarar : திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர் கோயில் திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன்  துவங்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம்  அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. 


Thirukadayur Amirthakadeshwarar : திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர் கோயில் திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்

அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80,100 வயது  பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும்.

Rural Innovator Award: ரூ. 1 லட்சம் பரிசுடன் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது; அரசு விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


Thirukadayur Amirthakadeshwarar : திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர் கோயில் திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்

இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய  இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீ அபிராமி அம்மனின் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதனை அடுத்து விநாயகர், அபிராமி அம்மன், சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. 

Kalaignar Women's Assistance Scheme: ரூ.1000 மகளிர் உரிமை தொகை.. ஜூலை 24 ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள்.. மேயர் திட்டவட்டம்..


Thirukadayur Amirthakadeshwarar : திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர் கோயில் திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்

விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் பூஜைகளை கணேச குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர்‌. இந்நிகழ்ச்சியில் திருக்கடையூர்  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 21-ம் தேதி தேரோட்டம் திருவிழாவும், 22 -ம் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர்  செய்து வருகின்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!
தங்க கவசம், வைரவேல் தரிசன மகிமை! சுவாமிமலை முருகனின் அற்புத ரகசியங்கள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget