மேலும் அறிய

ஆன்மீகம்: புஷ்ப பல்லக்கில் இரவு முழுவதும் சட்டைநாதர் கோயில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சட்டைநாதர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

ஆன்மீகம்: புஷ்ப பல்லக்கில் இரவு முழுவதும் சட்டைநாதர் கோயில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா

இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில்,  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.

ஆன்மீகம்: புஷ்ப பல்லக்கில் இரவு முழுவதும் சட்டைநாதர் கோயில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா

தொடர்ந்து நேற்று உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 20 ம் தேதி 8 கால யாகசாலை பூஜைகளில்   தொடங்கி  8-ம் கால யாகசாலை நிறைவடைந்து  சுவாமி, அம்பாள், தோணியப்பர், சட்டைநாதர், முத்துச்சட்டைநாதர் ஆகிய தெய்வங்களுக்கு நவாக்கினியும், பரிவாரங்கள் சேர்த்து 82 யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று, 120 வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் 8 -ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இறுதியில்  பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது.

ஆன்மீகம்: புஷ்ப பல்லக்கில் இரவு முழுவதும் சட்டைநாதர் கோயில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா

பூர்ணகதி மகா தீபாரதனையை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து விமான கலசங்களை  வந்தடைந்தனர். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமாக சன்னிதான முன்னிலையில் ராஜகோபுரம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கோபுரம்கள், சுவாமி, அம்பாள், சட்டைநாதர், தோனியப்பர், முத்து சட்டைநாதர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி  மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானங்களிலும் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

ஆன்மீகம்: புஷ்ப பல்லக்கில் இரவு முழுவதும் சட்டைநாதர் கோயில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா

மேலும், கோயில் நிர்வாகம் சார்பாக ஹெலிகாப்டர் மூலமாக கோயில் விமானங்கள் மீது மலர்கள் தூவப்பட்டது. தொடர்ந்து மாலை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இரவு விநாயகர், வள்ளி தெய்வானை உடனடியாக முருகப்பெருமான், சுவாமி -அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ   மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு நாதஸ்வர கச்சேரி, நாட்டிய நிகழ்வுடன் புஷ்பப் பல்லக்தில்  பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. தேரோடும் நான்கு வீதிகளிலும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வலம் வந்து  கலந்து கோயிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget