(Source: ECI/ABP News/ABP Majha)
குத்தாலம் அருகே கோயில் குளத்தில் தலை, கை, கால்கள் இன்றி கிடைத்த சிலை - ஐம்பொன் சிலையா? என ஆய்வு
குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயரத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில் குளத்தில் 3 அடி உயரத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஐம்பொன் சிலையை வருவாய்துறை அதிகாரிகள் குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
பாடல்பெற்ற பழைமை வாய்ந்த உமாமகேஸ்வரர் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார். இது சோழ அரசால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த நடராஜர் சன்னதி ஆகும். கிராமத்தில் பண்டைய காலத்தில் திருநல்லம் என்று அழைக்கப்பட்ட பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயம் இந்த உமாமகேஸ்வரர் ஆலயம்.
ஆதித்யநாத்தின் ஓவர் கான்ஃபிடண்ட்: உ.பி பின்னடைவுக்கு 6 முக்கிய காரணங்களை கண்டறிந்த பாஜக!
குளத்தில் கிடைத்த சிலை
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்தகுளம் பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது. அப்போது குளத்தில் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயரத்தில் 350 கிலோவிற்கு மேல் எடையில் தலை, கை, கால், இல்லாமல் உடல் மட்டும் உள்ள சிலை ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது.
Bank Of Baroda: வாடிக்கையாளர்களே! புதிய டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பாங்க் ஆஃப் பரோடா!
சிலையை எடுத்துச்சென்ற அதிகாரிகள்
இதனை அடுத்து உடனடியாக குத்தாலம் வட்டாட்சியர் சத்தியபாமா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்து அதிகாரிகள் கண்டெடுக்கப்பட்ட சிலையை கைப்பற்றி குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொல்லியல்துறை ஆய்விற்கு பின்னரே இந்த சிலை ஐம்பொன் சிலையா? என்று தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
CLAT 2025: டிச.1 கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; அக்.15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?