மேலும் அறிய

Manimegalai: குக் வித் கோமாளி - பிரியங்கா மீது குற்றச்சாட்டு! மணிமேகலைக்கு ஆதரவும் எதிர்ப்பும்..விளாசும் சுசித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து பிரியங்காவின் தலையீடால் மணிமேகலை விலகுவதாக அறிவித்த நிலையில் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மணிமேகலை எடுத்த முடிவு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என்றும் மணிமேகலை மறைமுகமாக கூறியிருந்தார். ஆனால் மணிமேகலை பெயரை குறிப்பிடாமல் சொன்னது பிரியங்காவை தான் என்பது எல்லோருக்குமே தெரியும்.

இத்தனை வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மணிமேகலை தனக்கு சுய கௌரவம் முக்கியம் என்று அதே விஜய் டிவியில் சீனியர் தொகுப்பாளரான பிரியங்கா மீது பயங்கரமாக குற்றச்சாட்டுகள் வைத்தார். ஆனால் இதை மறுத்து பிரியங்காவோ அல்லது சேனல் தரப்பினரோ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களின் மத்தியில் பேசி பொருள் ஆகியுள்ளது.

அதேபோல் பல வருடங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே பாவனா சேனலை விட்டு வெளியேற பிரியங்கா தான் காரணம் என ஒரு செய்தி இணையத்தில் வந்த நிலையில், அவரே அது பற்றி எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்து இருக்கிறார். "நான் பிரியங்கா பற்றி அப்படி எப்போதும் சொன்னதில்லை.

அப்படி ஒரு வீடியோ இருந்தால் காட்டுங்க. அப்புறம் பேசலாம். நான் சூப்பர்சிங்கர் ஷோவில் இருந்து வெளியேறியதற்கு காரணம் வேறு துறையில் என் கனவை அடைய தான். நானும் என் கணவரும் மும்பையில் ஒன்றாக இருக்கிறோம். அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு அது. அவ்வளவுதான்" என பாவனா கூறி இருக்கிறார். 

அனிதா சம்பத் இன்ஸ்டா ஸ்டோரி:

அதே நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்டோரியும் ரசிகர்களிடம் பேசு பொருள் ஆகியுள்ளது.  அவர் வெளியிட்ட பதிவில், "யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார்" என அனிதா சம்பத் கூறி இருக்கிறார். தான் பாதிக்கப்பட்டு இருப்பதை தான் அனிதா சம்பத் இப்படி கூறி இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் மணிமேகலை ஷோவில் இருந்து விலகுவதாக போட்ட பதிவில், "Guts all the best mani" என அனிதா சம்பத் கமெண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பாடகி சுசித்ரா பிரியங்காவை விளாசி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக மட்டுமே தான் இந்த வீடியோவை வெளியிடவில்லை என்றும், மோசமான சூழ்நிலையில் இருந்து விலகும் தைரியமான முடிவை எடுத்ததுடன் அங்கு நடக்கும் விஷயங்களை தெளிவாக பேசியுள்ள மணிமேகலையின் இந்த நடவடிக்கை அவர்மீது ஏராளமான மரியாதையை கொடுத்துள்ளது” என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

மணிமேகலைக்குத்தான் ஆதரவு:

தான் எப்போதும் மணிமேகலையின் பக்கம்தான் என்றும் சுசித்ரா கூறியுள்ளார். அவர் அந்த நிகழ்ச்சியில் எத்தனை பாதிப்புகளை அடைந்திருப்பார் என்பதை தன்னால் உணர முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா குறித்தும் பேசியுள்ள சுசித்ரா, அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் கேட்டால் தெரியும் என்றும் கூறியுள்ளார். மிகவும் திறமையான அவரது வாழ்க்கை நாசமாகி விட்டதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். இந்த வீடியோவின் நோக்கம் தான் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக உள்ளதை தெரிவிப்பதுதான் என்றும் சுசித்ரா பேசியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget