தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சக்திபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா - பக்தர்கள் சாமி தரிசனம்
கருங்குயில்நாதன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை உடனாகிய ஸ்ரீ சக்திபுரீஸ்வர சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கருங்குயில்நாதன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மை உடனாகிய ஸ்ரீ சக்திபுரீஸ்வர சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்திரன் குயில் வடிவம் கொண்டு இறைவனைப் பூசித்த தலமே கருங்குயில் நாதன்பேட்டை என வழங்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த கோயில் 25வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 1962 -ஆம் ஆண்டு இங்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.
அதன் பின்னர் 60 ஆண்டுகள் கழித்து தற்போது இக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, இன்று காலை 9 மணியில் இருந்து காலை 10.30 மணிக்குள்ளாக மகா குடமுழுக்கு நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் இப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.
Google launch : அறிமுகமாகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட் வாட்ச், பிக்சல் 7 மொபைல் ! - எங்கு ? எப்போது ?
சிதம்பரம் அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கங்கையம்மன் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது. 72 அடி உயர ராஜகோபுரத்தில் தீட்சிதர்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான மீனவ கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பழையார் அருகே அமைந்துள்ளது தீவு கிராமமான கொடியம்பாளையம். இக்கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கங்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் 5வது குடமுழுக்கு விழா கிராமங்கள் சார்பாக மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 22 -ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நான்கு கால யாக பூஜை, மகா பூர்ணாகதி, தீபாரதனை, கோ பூஜை, கலசம் யாத்திரதானம், உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து கோயில் கலசங்களை புனித நீர் அடங்கிய கடம் வந்தடைந்தது. பின்னர் 72 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி தீட்சிதர்கள் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மற்றும் பல்வேறு மீனவ கிராம மக்கள், பக்தர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மீனவ கிராமத்தில் தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.