மேலும் அறிய

Google launch : அறிமுகமாகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட் வாட்ச், பிக்சல் 7 மொபைல் ! - எங்கு ? எப்போது ?

பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் ஆகியவற்றோடு சேர்த்து Nest ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோவையும் அறிமுகப்படுத்தவுள்ளது

 கூகுள் நிறுவனம் வருகிற  அக்டோபர் 6 ஆம் தேதி பிக்சல் 7 ஸ்மார்ட்போன் மற்றும் அதன் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ஈவென்ட்:

Alphabet Inc  க்கு சொந்தமான கூகுள் நிறுவனம் பிக்சல் என்னும் பெயரிலான ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி வருகிறது. மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் கூட அடுத்தடுத்த பிக்சல் சீரிஸ் மொபைல்கள் மூலமாக தனக்கென தனி பயனாளர்களை வைத்துள்ளது கூகுள். இந்த நிலையில் பிக்சல் மொபைலின் அடுத்த சீரிஸான பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தனது GoogleStore.com ஆர்டிக்கள் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் மொபைலுடன் கூகுள் தனது முதல் ஸ்மார்ட் வாட்ச்சினையும் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.  கூகுள் சாதனங்களின் வெளியீட்டு நிகழ்வு நியூயார்க்கில் உள்ள வில்லியம்ஸ்பர்க் சுற்றுப்புறத்தில் காலை 10 மணிக்கு ET (2 pm GMT) மணிக்கு நடைபெறவுள்ளது. கூகுள் மே மாதம் அதன் I/O நிகழ்வின் போது பிக்சல் 7 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் பற்றிய ஸ்னீக் பீக் ஒன்றை வெளியிட்டிருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.

Google launch : அறிமுகமாகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட் வாட்ச், பிக்சல் 7 மொபைல் ! - எங்கு ? எப்போது ?

முதல் கூகுள் ஸ்மார்ட்வாட்ச்:

கூகுள் வாட்ச் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “முதல் முறையாக கூகுளின் உதவி மற்றும் ஃபிட்பிட்டின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி நிபுணத்துவத்தை ஒன்றாகக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் புதிய, மறுவடிவமைக்கப்பட்ட WearOS அனுபவத்தில் வழங்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து பிக்சல் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும், பிக்சல் பட்ஸ் புரோ மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்களிலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.

Google launch : அறிமுகமாகிறது கூகுளின் முதல் ஸ்மார்ட் வாட்ச், பிக்சல் 7 மொபைல் ! - எங்கு ? எப்போது ?

பிக்சல் 7 வசதிகள் :

வரவிருக்கும் பிக்சல்  7 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் மற்றும் டென்சர் எனப்படும் கூகுளின் தனிப்பயன் மொபைல் சிப்பின் சமீபத்திய மறு செய்கையைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில்  பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் ஆகியவற்றோடு சேர்த்து Nest ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோவையும் அறிமுகப்படுத்தவுள்ளது. அக்டோபர் மாதம் அறிமுகமாகவுள்ள அனைத்து சாதனங்களையும் வாங்க விரும்புபவர்கள் googleStore.com இல் ஷாப்பிங் செய்துக்கொள்ளலாம் . அல்லது  நீங்கள் நியூயார்க் நகரப் பகுதியில் இருந்தால் நேரடியாக Google Stores ஐ விசிட் செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.  நிகழ்ச்சியை காண விரும்புவர்கள் GoogleStore.com/events என்னும் வலைத்தள பக்கங்களில் லைவ் ஸ்டிரீமிங்கில் பங்கேற்காலம் . அறிமுகமாகும் சாதனங்கள் குறித்த விவரங்களை @madebygoogle என்னும் பக்கம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget