மேலும் அறிய

Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

Aadi Amavasai 2025: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது.

ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாகும். இந்நாளில் பித்ருக்களுக்கு (மறைந்த முன்னோர்கள்) எள்ளும், தண்ணீரும் இட்டு தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் ஆசிகளைப் பெறலாம் என்பது தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படும் நம்பிக்கையாகும். பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் மிகவும் பிடித்தமானவை என்பதால், அமாவாசை நாளில் அவர்களை நினைத்து பித்ரு ப்ரீதி (முன்னோர்களை மகிழ்வித்தல்) செய்வது வழக்கமாக உள்ளது. ஆகையால் இந்த சிறப்பு மிக்க ஆடி அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் புண்ணியத் தலங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்க மக்கள் பெருமளவில் கூடுவார்கள்.

Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளின் மகத்துவம்

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, தை மாதத்தில் வரும் அமாவாசை, மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை ஆகியவை மிகவும் விசேஷமான நாட்களாகக் கருதப்படுகின்றன. இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் ஆறு, குளம் மற்றும் கடலில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து, அருகில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். இதன் காரணமாக, தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் புண்ணிய நதிக்கரைகளில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வுகள் பக்திப்பூர்வமாக நடைபெறுகின்றன.

Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

பிரசித்தி பெற்ற சிவாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு மற்றும் குறிப்பிட்ட சில அமாவாசை அன்று தீர்த்தவாரி நடை பெறுவது வழக்கம். 

Aadi Amavasai 2025: ஆடி அமாவாசை - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!

ஆடி அமாவாசை 

அந்த வகையில் இன்று ஆடி மாத அமாவாசை அடுத்து சுவாமி, அம்பாள் தீர்த்தக் கரையில் எழுந்தருள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரியின் போது திருவெண்காடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர். தீர்த்தவாரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயில் வழிபாடு செய்தனர். தீர்த்தவாரி பூஜைகளை சங்கர் குருக்கள் செய்து வைத்தார். மேலும் கடந்த ஜுலை 7 -ம் தேதி இக்கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில் தற்போது மண்டலாபிஷேக நடைபெற்று வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget