மேலும் அறிய

Mayana Kollail: சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா! பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்!

சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் காவல் தெய்வங்களின் வேடமிட்டு வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மயான கொள்ளை என்பது அகிலத்தை காக்கும் அம்மன் கடும்கோபம் அடைந்து உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அம்மாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மாவசை தினத்தில் மயான கொள்ளை விழா நாடு முழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. 

மயான கொள்ளை திருவிழா:

அதன் அடிப்படையில் மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்தி தினத்தில் அங்காள அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

Mayana Kollail: சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா! பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்!

இதனை தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரும் போது விரதம் இருக்கும் பக்தர்கள்  அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல குழந்தைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என ஏராளமானோர் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்துவர்.

நேர்த்திக்கடன்:

அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் ரத்தம் சிந்த வரும்போது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்கள் அம்மன் வரும்போது வழிகள் தோறும் படுத்து கொள்ளவார்கள். இந்த நிலையில் பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பில்லி, பிணி, என சகலமும் நீங்கும் எனபது ஐதீகம். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடிப்பார்கள்.‌

இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்வார்கள். சேலம் மாநகர மணக்காடு, கிச்சிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் வேடமிட்டு ஜான்சன் பேட்டை மயானத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

Mayana Kollail: சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா! பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைகள்!

இது குறித்து பக்தர்கள கூறும்போது, பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள்  கூறும்போது இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் மேலும் பில்லி, பிணி பிடித்தவர்கள் இங்கே கலந்து கொண்டால் நீங்கி விடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: கடலூரில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Embed widget