ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மக தெப்பத் திருவிழா.. வெள்ளி கருட வாகன சேவை.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா வெள்ளி கருட வாகன சேவையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா சுவாமி வெள்ளி கருட வாகன சேவை.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயம் தான்தோன்றி மலை பகுதியில் உள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் மாசி மாத தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகிறார்.
இந்நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன சேவையில் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா காட்சி அளித்தார். தொடர்ந்து முக்கிய வீதியில் வழியாக சுவாமி திருவீதி விழா காட்சி தந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார்.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா வெள்ளி கருட வாகன சேவையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.