மேலும் அறிய

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே:

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் நேற்று (ஜூலை 6) நடைபெற்ற போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூலை 7) இந்திய அணி 2வது டி20 போட்டியில் விளையாடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் நடையைக்கட்டினார்.

இவரின் விக்கெட்டை தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்தார் ருதுராஜ் கெய்க்வாட். மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். அதன்படி மொத்தம் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி 46 பந்துகளில் 100 ரன்களில் எடுத்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் ரிங்கு சிங். இவர்கள் இருவரும் அருமையான பார்ட்னர்ப் அமைத்து விளையாடினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. கடைசி வரை களத்தில் நின்ற  ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் ரிங்கு சிங் 22 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார்.

இந்திய அணி அபார வெற்றி:

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இன்னசெண்ட் கையா மற்றும் வெஸ்லி மாதேவேரே களம் இறங்கினார்கள். இதில் இன்னசெண்ட் கையா 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 4 ரன்களில் நடையைக்கட்டினார். இவரது விக்கெட்டை தொடர்ந்து களத்தில் நின்ற வெஸ்லியுடன் ஜோடி சேர்ந்தார் பிரையன் பென்னட். இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே அணிக்கு வேகமாக ரன்களை சேர்த்தது. அந்தவகையில் பிரையன் பென்னட் 9 பந்துகள் களத்தில் நின்று 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த டியான் மியர்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

தலைப்பு செய்திகள்

IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget