Marriage: இன்னும் கல்யாணம் ஆகலையா..? செல்ல வேண்டிய கோயிலும்..செய்ய வேண்டிய பரிகாரமும் இதுதான்..!
எண்ணிலடங்கா திருமணங்கள் நம்மை சுற்றி நடந்தாலும் நம் பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற ஏக்கம் பல பெற்றோர்களுக்கு உள்ளது.
ஆணோ, பெண்ணோ அவர்கள் வாழ்விற்கு புதிய அர்த்தத்தை தருவதும், புதிய அத்தியாத்தியதை்த தொடங்கி வைப்பதும் திருமணமே ஆகும், ஒவ்வொரு முகூர்த்த தினத்திலும் திருமணம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், சிலருக்கு திருமணம் என்பது கைகூடாமலே இருக்கிறது. அனைத்தும் கூடி வந்தும் திருமணம் தட்டிச் செல்வது வரன்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும் ஒன்றாகும்.
ஜாதகத்தில் 7ம் வீடானது பாவ கிரகங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட திருமணம் தள்ளிப்போகலாம். இதை களத்திர தோஷம் என்பார்கள். களத்திர தோஷம் உள்பட எந்த தோஷத்தால் உங்க திருமண வாழ்வு தடைபட்டிருந்தாலும், கீழே உள்ள பரிகாரங்களை செய்தால் திருமண தடை விரைவில் நீங்கும்.
வாழைப்பூ பரிகாரம்:
வாழைப்பூ பரிகாரம் என்பதை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் செய்ய வேண்டும். ஒரு வாழைப் பூவை வாங்கிக்கொள்ள வேண்டும். பின்பு, அதில் உள்ள பூக்களை தனித்தனியாக உதிர்க்க வேண்டும். அந்த பூக்களை கொண்டு மாலையாக கோர்க்க வேண்டும்.
இப்போது தயாராக உள்ள வாழைப்பூ மாலையை உங்கள் வீட்டின் அருகே உள்ள பத்திரகாளி அம்மன் கோயில், பிரத்யங்கரா தேவி கோயில் அல்லது வராஹி அம்மன் கோயில் ஆகிய ஏதாவது கோயிலுக்கு சென்று அங்குள்ள அம்மனுக்கு சாற்ற வேண்டும். பின்னர், அம்மனிடம் திருமணம் நடக்க மனமுருகி வழிபட வேண்டும். இந்த பூஜையை 48 நாட்கள் தவறாமல் செய்ய வேண்டும்.
திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயில்:
திருமணத் தடை இருப்பவர்களை பல கோயில்களுக்கு சென்று வர முன்னோர்கள் கூறியுள்ளனர். அவற்றில் மிக மிக முக்கியமான கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்சீலி ஆலயம் ஆகும். பொதுவாக வாழை மரத்தை வெட்டிவிட்டால் அது மீண்டும் துளிர்க்கும். அதுவே வாழையின் சிறப்பு ஆகும்.
ஆனால், தென் கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த திருப்பைஞ்சீலி ஆலயத்தில் வாழையை வெட்டினால் அது மீண்டும் துளிர்விடாது. இந்த அற்புதம் நிகழும் இந்த ஆலயத்தில் திருமணத் தடை இருப்பவர்கள் நேரில் சென்று வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமண யோகம் கிட்டும்.
ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இங்கு தவம் புரிகையில் பார்வதி தேவி அவ்ரகளுக்கு வரம் தந்ததுடன் வாழை வடிவத்தில் இங்கு குடி கொண்டுள்ளார் என்பது தல வரலாறு ஆகும். இந்த வாழை வனத்தின் நடுவே சுயம்பு லிங்கமாக சிவபெருமானும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இங்குள்ள திருலிவனேசுவரரை வழிபட்டால் ஏராளமான நன்மைகளும் உண்டாகும் என்பது தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் படிக்க: Palani Murugan Temple: பழனி கோயில் பக்தர்கள் கவனத்திற்கு: இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இல்லை: காரணம் என்ன?
மேலும் படிக்க: Avani Sunday: 'சிவன், விஷ்ணு, பிரம்மா..' : ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை இத்தனை ஸ்பெஷலா?!