மேலும் அறிய

மகாலட்சுமிபோல மனைவி வேண்டுமா? இதை செய்தாலே போதுமாம்..

திருமணம் ஆகாத ஆண்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய என்ன செய்ய வேண்டும்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த ABP வாசகர்களே, அனைத்து ஆண்களுக்கும் அன்பான, அழகான மனைவி அமைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.  அதிலும் சிலருக்கு மனைவி நல்ல குணத்தோடு தான் இருக்க வேண்டும் அழகு எல்லாம் முக்கியமில்லை என்று சொல்பவர்களும் உண்டு.  பூமியில் பிறந்த அத்தனை பெண்களுமே அழகு தான்.  இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

சக்தியின் வடிவம் பெண்:

ஒரு பெண்  எப்படி தோற்றம் அளிக்கிறார் என்பது அவரவர் பார்வையில் தான்  இருக்கின்றதே தவிர  மற்றபடி,  அனைத்து பெண்களுமே மகாலட்சுமி வடிவம்தான், அனைத்து பெண்களுமே சக்தியின் வடிவம் தான்.   ஒரு மனிதன்  பெண்ணை  சக்தியின் வடிவமாக பாவித்து வணங்க ஆரம்பித்து விட்டால் அவன் வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. கோயிலுக்கு சென்று  அம்மன் காலில் விழுவதும்  வீட்டில் இருக்கக்கூடிய நம்மை பெற்றெடுத்த தாயின் காலில் விழுவதும்  ஒன்றுதான்.  தாய்க்கு மிஞ்சிய தெய்வம் இல்லை  என்ற சொல் இருக்கிறது. சரி பிறகு எதற்கு அழகான மனைவி அமைய மகாலட்சுமி வழிபாடு?

உள்ள அழகு:

சுரூபம் என்ற ஒரு வார்த்தை உண்டு.  ஒரு ஆள் பார்ப்பதற்கு எப்படி தோற்றமளிக்கிறார் என்பது  தோற்றத்தை வைத்து மட்டும் ஒரு மனிதனிடம் நாம் பழகி விட முடியாது அல்லவா?  அவர்களுடைய உள்ளமும்  அழகாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் தற்போது சொல்ல வருகிறேன். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி  எப்பொழுதும் அவருக்கு  பணிவிடை செய்பவராகவும்  பூமியின் செல்வத்தை பாதுகாப்பவராகவும்  தன்னை நாடி வருவோருக்கு  செல்வங்களை அள்ளி வழங்குபவராகவும் இருக்கிறார்.

தன்னிடம் அவ்வளவு செல்வம் இருக்கிறது என்ற கர்வம் சிறிதளவு  நம் தாயார் மகாலட்சுமி இடம் இல்லை.   வெள்ளிக்கிழமை தோறும்  பெண்கள் விரதம் இருந்து  பிடித்த  தெய்வத்திற்கு குறிப்பாக பெண் தெய்வத்திற்கு மனதார பூஜை செய்து வந்தால், அவர்களுக்கு மனம் விரும்பிய மாங்கல்யம் உண்டாகும் என்பது தான்  சாஸ்திரம் கூறும் உண்மை.  ஏன் வெள்ளிக்கிழமை? என்றால்  திங்கள்  சந்திரனின் ஆதிக்கத்தைக் கொண்ட தினம்,    செவ்வாய்க்கிழமை  அங்காரகனின் ஆதிக்கத்தை கொண்ட தினம்  இப்படியாக ஒவ்வொரு தினத்திலும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கம் உள்ளது அதேபோல தான்  வெள்ளிக்கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது.

ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன்  தான் மனைவி:

எந்த ஒரு  ஆண் ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும்  உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்  அவர்களுடைய சுக்கிரனின் வலிமையை வைத்து தான் அவர்களுக்கு அமையவிருக்கின்ற மனைவியின் வலிமையை கணக்கிடுவார்கள். சுக்கிரன் 12 ராசிகளில் எந்த வீட்டில் அமர்க்கிறாரோ? அந்த வீட்டின் சக்தியை தான்  உங்களுக்கு வரக்கூடிய மனைவி பிரதிபலிப்பார்.  உங்களுக்கு சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால்  ஆயுள் உள்ளம் கொண்டது. அதில் எந்த மாற்றுக் கருத்தும்  இல்லை. மற்றவர்களை பாதுகாப்பதில் வல்லவர். இப்படியாக நீங்கள் வாங்கி வந்த விதியின் அடிப்படையில்  நிச்சயமாக  உங்களின் சுக்கிரன் 12 ராசிகளில் ஒரு வீட்டில் அமர்ந்து உங்களுக்கான பலனை கொண்டு வந்து கொடுப்பார்.

சுக்கிரன் தான் மனைவி என்று கூறிவிட்டேன்.   அதை சுக்கிரனின் ஆதிக்கத்தை கொண்ட தினம் வெள்ளிக்கிழமை என்றும் சொல்லிவிட்டேன்,   வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்  அல்லது சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி என்றும்  கூறலாம்.   அப்படியானால் நேரடியான சுக்கிரனின் தொடர்பு மகாலட்சுமிக்கு உள்ளதால் நீங்கள்  சுக்கிரன் என்கிற மனைவி   தோற்றத்தில் அழகாகவும் உள்ளத்தில் அழகாகவும்  உங்களுக்கு அமைய   மகாலட்சுமியே வழிபடுவது.

சுத்தத்தின் அவசியம்:

தற்போது இருக்கும் நவீன உலகில் ஆண்கள் வேகமாக செயல்படுகிறார்கள்  நாளைக்கு பெரிய அளவுக்கு சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.   அடுத்த நாளே கோடீஸ்வரராக வேண்டுமென்றும் எண்ணம் இருக்கிறது அதற்காக பங்குச்சந்தையில் ஆரம்பித்து  பல நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடங்கி  புதிய வியாபாரம் தொழில் என்று அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்கிறார். அது மறுப்பதற்கு இல்லை.  ஆனால் ஒருவரிடம் செல்வம் சேர வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் மகாலட்சுமியின் அம்சம் காரணம். அழகான என்ற சொல்  மகாலட்சுமியிடம் இருக்கிறது.  

சுத்தமாக இருக்க வேண்டும்  வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . இப்படி  தூய்மையான இடத்தில் மகாலட்சுமி நிச்சயம்  வாசம் செய்வர்.   ஆகையால் தான் அந்த காலத்தில் வீடு முழுவதும் சாணம் தெளித்து  மஞ்சள்  கரைத்து அதை வீடு முழுவதும் பூசி  அவர்கள் மீதும்  பூசி அவர்களையும் சுத்தமாகவும் வீட்டையும் சுத்தமாகவும் வைத்திருப்பார்கள் அந்த காலத்திலும் தாய்மார்கள் அதனால் தான் நம்முடைய  சந்ததிகள் இன்று ஓரளவுக்கு நன்றாக இருக்கிறார்கள் என்று கூறலாம்.

மகாலட்சுமி அனுகிரகம்:

நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வணங்க வேண்டும் என்பது இல்லை. திருமணம் ஆகாத ஆண்கள்  வயதிற்கு வந்த பெண்களை  துன்புறுத்துவதோ கஷ்டப்படுத்துவதோ மனரீதியாக தொல்லை கொடுப்பது போன்ற காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. அது உங்கள் சகோதரியாக இருக்கலாம்.  தெரிந்த பெண்ணாக இருக்கலாம். தோழியாக இருக்கலாம்.  அவர்களை மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் பார்த்துக் கொள்வது உங்களின் கடமை.  அப்படி செய்யும் பட்சத்தில் மகாலட்சுமி அனுகிரகம் உங்களுக்கு எப்போதும் உண்டு.

வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய   சுமங்கலி பெண்களுக்கு புடவை வாங்கி கொடுக்கலாம்.   வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.   அவர்களின் மனதை மகிழ்விக்கலாம்.   இப்படி செய்யும்போது மகாலட்சுமி அனுக்கிரகம் நமக்கு உண்டு. மொத்தத்தில்  பெண் இனத்தை நாம் தெய்வமாக வழிபடும் பொழுது  நம்முடைய சந்ததிகள் முழுவதுமாக  செல்வ செழிப்போடு வாழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  

சிறப்பாக அமையும்:

 திருமணத்திற்காக வாரம் தேடிக் கொண்டிருக்கும் ஆண்கள் மேலே சொன்னவற்றை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.   வெள்ளிக்கிழமை தோறும்  மகாலட்சுமி  விரதம் இருக்க வேண்டும் என்று இல்லை  ஆனால் மனதார தெய்வத்தை வழிபட்டு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும்  நமக்கான பெண் நம்மிடம் வந்ததற்கு பின்பாக நம் வாழ்க்கை மேலே செல்ல வேண்டும்  என்பதாகத்தான் இருக்க வேண்டும்.   நிச்சயமாக  உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget