மேலும் அறிய

மதுரை குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது - நீதிபதி நேற்று வேதனை... இன்று உடனே அகற்றப்பட்ட குப்பைகள்

குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விவேக் குமார் சிங் கருத்து தெரிவித்த நிலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள குப்பை கழிவுகள் ஜே.சி.பி. மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
 

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு செய்தார்

 
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மற்றும் மக்காத குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மேலும் அந்த குப்பை கழிவுகளை அன்றாடம் தீயிட்டும் எரித்து வந்தனர். இதனால் காற்று மாசடைவதுடன் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதியில் கடக்க கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வந்தனர்.
 

குப்பை மாநகரம் போல் மாறிவிட்டது

 
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி மாசடைந்து இருப்பதாக நேற்று நீதிபதி விவேக் குமார் சிங் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வளாகத்தின் பின்புறம் உள்ள மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதால் அந்தப் பகுதியை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகம் மாசடைந்து இருப்பதாகவும், கோவில் மாநகரமான மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மாநகரம் போல் மாறிவிட்டதாக வேதனையுடன் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது கருத்து தெரிவித்திருந்தார்.
 

குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது 

 
இந்த நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா  ஆகியோர் தலைமையில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் பின்புறம் உள்ள பகுதியில் இருந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றது. நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் கொட்டப்பட்டு இருந்த மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி மற்றும் 10க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
 

ஏன் புகார் அளிக்கவில்லை

 
நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்போது துரிதமாக நடைபெறும் இந்த குப்பைகள் அகற்றும் பணி மீண்டும் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த பணியின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி, இன்ஜினியர் சுரேஷ், கிழக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் உள்ளனர். குப்பைகளை இந்த பகுதியில் கொட்டிய நபர்கள் மீது ஏன் தேசிய நெடுஞ்சாலை துறை காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
காவலர் தாக்குதலில் கணவர் மரணம்: மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!
வெளிநாட்டு மகள் தந்த பிரம்மாண்ட பரிசு: தாயின் 80-வது பிறந்தநாளில் 80 சீர்வரிசை, 2 லட்சம் பண மாலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget