மேலும் அறிய

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி விழா - வழிபாடும் விரத முறைகளும்!

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி பிப்ரவரி- 26ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கையில் நினைத்தவை யாவும் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் மகா சிவாரத்திரி நாளில் விரதம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிவராத்திரியன்று விரதம் இருப்பது ஏன், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம். 

மகா சிவராத்திரி 2025:

அடுத்த வாரம் (பிப்ரவரி -26) புதன்கிழமை அன்று மகா சிவராத்திரி நாள். இந்த நாளில் ஈசனை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது பல நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. 

மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால் வேண்டியபடி நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அதையே நாம் காலங்காலமாக பின்பற்றி வருகிறோம். 

மகாசிவராத்திரி மகிமைகள்:

சிவனின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலும், பிரம்மனும் தங்களின் முயற்சிகளில் தோல்வி அடைந்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்க சிவபெருமான் லிங்கோத்பவராகவும், பெரும் ஒளிப்பிழம்பாகவும் தோன்றியது,  கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றது,  மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்தது, - இப்படி நடந்ததெல்லம் இந்த மகாசிவராத்திரி நாளில்தான். 

 இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும், விரத முறைகள் உள்ளிட்டவற்றை பற்றி கீழே காணலாம்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் முந்தைய நாள் மட்டுமே உணவருந்திவிட்டு சிவநாமம் ஜபித்து தயாராக இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் சிவபெருமானை தவிர யாரையும் நினைக்கக் கூடாது. சிவ புராண நூல்களை வாசிக்கலாம். சிவன் பாடல்களைப் பாடலாம். கோயிலுக்குச் சென்று பூஜைகளில் பங்கேற்கலாம். 

மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை பூஜிப்பது ஓராண்டு முழுவதும் ஈசனை நினைத்து பூஜை செய்த புண்ணியம் கிட்டும் என்று சொல்லப்பட்டுகிறது. ஐந்தெழுத்தான சிவநாமமான ‘ ஓம் நம சிவாய’-த்தினை மகா சிவராத்தி நாள் முழுக்க சொன்னால் நல்லது. ஆண்டுமுழுக்க சிவபூஜை செய்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. 

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? 

விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிக்க வேண்டும். 

 சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும். அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு இருக்கக் கூடாது. 

சிவராத்திரி என்பது சிவனின் ராத்திரி. அன்றைய நாள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என ஜெபித்து சிவனை பூஜிப்பபவர்கள் மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர் என்று சொல்லப்படுகிறது. 

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஒரு சில சிவாலங்களில் சிவராத்தியன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அதில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம். வீடுகளில் பூஜை செய்பவர்கள் வீடுகளிலேயே தேவாரம் திருவாச பாடல்களை படிக்கலாம். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget