மேலும் அறிய

Maha Shivaratri 2024: சிவபெருமான் பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் அளித்தது ஏன்?

நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த லிங்கோத்பவ மூர்த்தியாக சிவராத்திரி நாளன்று அண்ணாமலையார் எழுந்தருளினார்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. 

சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு, பிரம்மா 

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று சிவபெருமான் கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர். மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் எடுத்து பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின் முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் தாழம்பூவிடம் நீ சிவபெருமானின் முடியில் இருந்து எப்போது விழுந்தாய் எனக்கேட்டுள்ளார். அதற்கு தாழம்பூ நான் பல நாட்களாக கீழ்நோக்கி வந்துகொண்டு இருக்கிறேன் என கூறியது. உடனடியாக பிரம்மன் தாழம்பூவிடம்  சிவபெருமானின் திருமுடியைக் தான்  கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் அடியைக் காண சென்ற பெருமாள் காண முடியாமல் திரும்பி தன்னுடைய தோல்வியை சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.

Maha Shivaratri 2024: சிவபெருமான் பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் அளித்தது ஏன்?

பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம்

பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் தெரிவித்தார். அவருக்கு தாழம்பூ பொய்சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனவும் மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. அதேபோல் முடி காணாத ஜோதிப் பிழம்பாய் எழுந்தருளிய நாள்  மகா சிவராத்திரி ஆகும். மேலும் நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த லிங்கோத்பவ மூர்த்தியாக சிவராத்திரி நாளன்று அண்ணாமலையார் எழுந்தருளினார். எனவே சிவராத்திரி எழுந்தருளிய திருத்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா  (மார்ச் 8) நடைபெற்ற உள்ளது.

Maha Shivaratri 2024: சிவபெருமான் பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் அளித்தது ஏன்?

ஆண்டுக்கு ஒரு முறை  சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை

இதையொட்டி காலையில்  கோயிலில் பல்வேறு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெறும். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவில் கொடிமரத்தின் அருகில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும் மகா சிவராத்திரி அன்று அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்றும்  முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது. மேலும்  நள்ளிரவு 12 மணியளவில்  அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிரதம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெறும்  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சிவனுக்கு வைத்து வழிபடும் தாழம்பூவை வைத்து சிறப்பு தீப ஆராதனை நடைபெறும் இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்வர்கள்.மேலும் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வருவார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget