மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha: பெரிய ஊரு.. பெரிய திருவிழா.. குலுங்கப் போகுது மதுரை மண் !
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலகலமாக தொடங்கியது.

மீனாட்சியம்மன் கோயில்
ஏப்ரல் 29-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே-8 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், மே-9ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது மிகவும் பிரசித்திபெற்றதாகும். 15நாட்கள் திருவிழாவான சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டது
முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு. அங்கு மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து கோயில் வளாத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல்
இதனைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவானது ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம், மே 08 -மீனாட்சி திருக்கல்யாணம், மே 09 -மீனாட்சி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. இதேபோன்று கள்ளழகர் கோயிலை பொறுத்தமட்டில் மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவை மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “திருந்தி வாழ்வதாக போலீஸிடம் என் மகன் சொன்னான்” - மதுரை என்கவுன்டர் சுபாஸ் சந்திரபோஸின் தந்தை கதறல்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை.. புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
க்ரைம்
கிரிக்கெட்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement