மேலும் அறிய
“திருந்தி வாழ்வதாக போலீஸிடம் என் மகன் சொன்னான்” - மதுரை என்கவுன்டர் சுபாஸ் சந்திரபோஸின் தந்தை கதறல்
என்கவுண்டரில் உயிரிழந்த சுபாஸ் சந்திரபோஸின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு.

உயிரிழந்த சுபாஸ் சந்திரபோஸ்
Source : whats app
திருந்திவாழ்வதாக கூறிய நிலையில் கிளாமர் காளி கொலை சம்பந்தமே இல்லாத நிலையில் அதனை காரணமாக கூறி என்கவுன்டர் செய்யப்பட்டதால் உரிய முழுமையான விசாரணை நடைபெறும் வரை உடலை பெறமாட்டோம் என சுபாஸ் சந்திரபோஸின் தந்தை தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பாதுகாப்பு
மதுரையில் வீ.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையவரும் பிரபல ரௌடி வெள்ளைக்காளியின் கூட்டாளியமான மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த சுபாஸ் சந்திர போஸ் என்பவரை நேற்றிரவு காவல்துறையினர் என்கவுன்டர் செய்தததில் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த சுபாஷ் சந்திர போஸின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உடற்கூறாய்வு நடைபெறும் பிணவறை பகுதிக்கு மற்ற உடல்களை பார்க்க வருகை தரும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் பலத்த சோதனைக்கு பின்பாக அனுமதி - பிணவறை பகுதியில் உள்ள இரண்டு வாசல்களும் மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை
என்கவுன்டரில் உயிரிழந்த சுபாஷ் சந்திர போஸின் உயிரிழப்பு தொடர்பாக உடலை பார்த்தும், சம்பவ இடத்திற்கு சென்றும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்திவருகிறார். என்கவுன்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மீது வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை கொலை செய்வதற்கு பதிலாக ஆள்மாற்றி ரேஷன் கடை முனியசாமியை கொலை செய்தது, தல்லாகுளம் பகுதியில் நடந்த கொலை வழக்கு உள்ளிட்ட கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா வழக்குகள், வழிப்பறி என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனுார் டோல்கேட் அருகில் 48 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதாகி துாத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 19ஆம் தேதி பிணையில் வந்த இவரை, மதுரை நகர காவல்துறை பிடிவாரன்ட் வழக்கு ஒன்றில் தேடி வந்தபோது கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
உடலை வாங்கமாட்டோம்
மதுரையில் வீ.கே.குருசாமி - வெள்ளைக்காளி தரப்பினரிடையே 22 ஆண்டுகால பகையில் 21 கொலை சம்பவங்களில் வெள்ளைக்காளி தரப்பில் 3ஆவது என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. கிளாமர் கொலை வழக்கில் தொடர்பு இல்லாத நிலையில் அதனை காரணமாக கூறி சுபாஸ் சந்திர போஸை காவல்துறையினர் என்கவுன்டர் செய்ததாக சுபாஸ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் குற்றச்சாட்டியுள்ளார். கிளாமர் காளி கொலை சம்பவம் நடைபெற்ற போது சகோதரியின் காதுகுத்து விழாவில் சாயல்குடியில் சுபாஸ் சந்திர போஸ் கலந்துகொண்டதாகவும், ஆனால் இந்த நாளில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறுவதை ஏற்க இயலாது என தந்தை குற்றச்சாட்டியுள்ளார். சுபாஸ் சந்திரபோஸ் திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் சுபாஸ் சந்திர போஸை என்கவுன்டர் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க இயலாது, உண்மையான விசாரணை முடியும் வரை உடலை வாங்கமாட்டோம் என சுபாஸ் சந்திர போஸின் தந்தை கூறியுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - “அராஜகம் செய்தால் இதுதான் கதி?” மதுரையில் ரவுடி எண்கவுண்டர்..!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















