Madurai Chithirai Thiruvizha: மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் ; மலையை விட்டு நகருக்குள் வரும் கள்ளழகர்
கள்ளழகர் திருவிழாவிற்காக அழகர் மலையைவிட்டு நகர் பகுதிக்கு இன்று மாலை கிளம்புகிறார். இதனால் திருவிழா மேலும் சிறப்படைய உள்ளது.
மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். முன்னதாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத் தேர்திருவிழாவும் நடைபெறும். இந்நிலையில் இன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆசியாவில் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டோம் மக்கள் வெள்ளத்தில் மிதக்க மாசி வீதிகளில் கொண்டாட்டமாக கொண்டு செல்லப்பட்டது !#madurai | @SRajaJourno | @JeeVaigai | @ramaniprabadevi | @Maduraikarandaa | @imanojprabakar | @CMOTamilnadu pic.twitter.com/Kj1bKjcUDD
— arunchinna (@arunreporter92) May 3, 2023
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
— arunchinna (@arunreporter92) May 3, 2023
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது.. மாசி வீதிகளில் குவிந்துள்ள பக்தர்கள்#madurai | #தேரோட்டம் | #மீனாட்சியம்மன் | #Chithiraithiruvizha | #chithiraifestival | @SRajaJourno | @abpnadu pic.twitter.com/XdB2wo8fZC
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்