மேலும் அறிய

நமச்சிவாய: சிவன் கோயில்களில் பக்தி முழக்கம்- அன்னாபிஷேகம் வெகு விமரிசை..!

Annabhishekam 2023 : காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அன்னாபிஷேகத்தை ஒட்டி சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஐப்பசி  அன்னாபிஷேகம் 
 
காஞ்சிபுரம் (Kanchipuram News): ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்கள்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்கத் திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தான் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். அதனால் பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார்.

நமச்சிவாய: சிவன் கோயில்களில் பக்தி முழக்கம்- அன்னாபிஷேகம் வெகு விமரிசை..!
 
அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையை கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிட்டதாக ஐதீகம்.
 
சிவபெருமான் அபிஷேகப் பிரியர்

இதனால் அவரது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் 11 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.

நமச்சிவாய: சிவன் கோயில்களில் பக்தி முழக்கம்- அன்னாபிஷேகம் வெகு விமரிசை..!

உண்மையை பறைசாற்றும் விதமாகவே

தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய  ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையைப் பறைசாற்றும் விதமாகவே ஐப்பசி பௌர்ணமி நாளில் கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில்
 
அவ்வகையில் காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரையில் அமைந்துள்ள, காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் அன்ன அபிஷேகத்தை ஒட்டி காலை சிவபெருமானுக்கு பால், தயிர்,  பன்னீர் சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 
நமச்சிவாய: சிவன் கோயில்களில் பக்தி முழக்கம்- அன்னாபிஷேகம் வெகு விமரிசை..!
இதனைத் தொடர்ந்து சிவபெருமானை அன்னத்தால் சிவாச்சாரியார்களால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு வகையான பழங்கள் கொண்டு மாலைகள், தோரணம் என அமைக்கப்பட்டும்,  பல்வேறு வண்ண மலர்களால் சிவபெருமான் அலங்கரிப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
 
நமச்சிவாய, நமச்சிவாய...
 
சிறப்பு தீபாராதனை நடைபெற்றபோது பக்தர்கள் நமச்சிவாய, நமச்சிவாய என கோஷங்கள் எழுப்பி எம்பெருமானை தரிசித்து இறையருள் பெற்றனர். இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, திமுக பொது குழு உறுப்பினர் சுகுமார், திமுக பொறியாளர் அணி தலைவர் தாஸ், மாநகராட்சி  4ஆவது மண்டலக் குழுத் தலைவர் செவிலிமேடு மோகன் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அன்னாபிஷேக விழாவில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களாக புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget