Spiritual Lal Dhaga : பூஜை முடிந்து கையில் சிவப்பு கயிறு கட்டுவது ஏன்? காரணம் என்ன?
இந்துக்கள் எந்தவித பூஜை செய்தாலும் கையில் கயிறு கட்டுவது வழக்கம். அதுவும் சிவப்பு நிற கயிறு ரொம்பவே பிரபலம். இதை இந்தியில் கலவா கயிறு எனக் கூறுகின்றனர். மணிக்கட்டில் இந்தக் கயிற்றைக் கட்டிக் கொள்கின்றனர்.
இந்துக்கள் எந்தவித பூஜை செய்தாலும் கையில் கயிறு கட்டுவது வழக்கம். அதுவும் சிவப்பு நிற கயிறு ரொம்பவே பிரபலம். இதை இந்தியில் கலவா கயிறு எனக் கூறுகின்றனர். மணிக்கட்டில் இந்தக் கயிற்றைக் கட்டிக் கொள்கின்றனர்.
சிவப்புக் கயிறு கட்டுவது இந்து மதத்தின் மீது கொண்டுள்ள பற்றின் அடையாளமாகவும் காணப்படுகிறது. நீண்ட ஆயுள், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியனவற்றைப் பெற இந்த கயிறு உதவும் என்பது நம்பிக்கை.
சிவப்புக் கயிறு கட்டும் பழக்கம் வாமன அவதாரத்தில் இருந்து தொன்றுதொட்டு வருகிறது. மகாபலி மகாராஜா கரங்களில் இந்தக் கயிறை வாமனன் கட்டிவிட்டதாக புராணக் கதைகள் உண்டு. இந்து முறைப்படி எந்த ஒரு நல்ல காரியமும் இந்த சிவப்புக் கயிறு கட்டாமல் நிறைவு பெறாது என்பது நம்பிக்கை.
1. வீட்டில் பூஜை நடக்கும்போது எல்லோரின் வீடுகளிலும் சிவப்பு நிற கயிறு இருக்கும். இது கெட்ட பார்வையில் இருந்து காக்கும் என்பது நம்பிக்கை
2. மோலி, கலவா, ரக்ஷா சூத்ரா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தக் கயிறை கட்டிக் கொள்வதன் மூலம் கடவுள் நம் பக்கம் நிற்பார். எதிரிகளை நம்மால் வீழ்த்த முடியும். இது பூரண ஆயுள் தரும். அதனாலேயே இதனை பாதுகாப்பு கயிறு என்றழைக்கிறோம்.
3. சிவப்புக் கயிறு கட்டும் பழக்கம் வாமன அவதாரத்தில் இருந்து தொன்றுதொட்டு வருகிறது. மகாபலி மகாராஜா கரங்களில் இந்தக் கயிறை வாமனன் கட்டிவிட்டதாக புராணக் கதைகள் உண்டு. இந்தக் கயிறை கட்டிக்கொண்டதாலேயே மகாபலிக்கு நித்திய ஆயுள் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. இதை ரக்ஷாபந்தன் அன்று சகோதரர்களுக்கு சகோதரிகள் கட்டலாம்.
4. இது சில இடங்களில் சிவப்பு நிறத்திற்குப் பதிலாக மஞ்சள் அல்லது பச்சை நிறங்களிலும் வழங்கப்படும். இருப்பினும் சிவப்பு நிற கலவா கயிறு தான் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிவப்பு என்பது ரத்தத்தின், நெருப்பின் நிறம். அதனால் சிவப்பு எப்போதும் வலிமை, அதிகாரம், மன உறுதியுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.
5. இதைக் கட்டுவதால் பிரம்மன், விஷ்ணு, ஈஸ்வரன், சரஸ்வதி. லக்ஷ்மி, துர்கா ஆகியோர் அருள் கிடைக்க இந்த சிவப்புக் கயிறு உதவும் என்று நம்பப்படுகிறது. பிரம்மன் அருளால் புகழ் கிடைக்கும், விஷ்ணு அருளால் சக்தி கிடைக்கும், சிவன் அருளால் உங்களில் தீய பழக்கங்களை வெல்லும் சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சரஸ்வதி கடாட்சம் இருந்தால் அறிவும், லக்ஷ்மி அருள் இருந்தால் செல்வமும், பார்வதி அருள்பாலித்தால் வலிமையும் கிடைக்கப் பெறும். சிவப்பு கயிறு அணிந்து கொள்வதால் சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகியனவும் சரியாகும். இந்து மதப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொன்றும் இதுபோன்ற அர்த்தமுள்ள கருத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது என அச்சமயத்தவரால் கூறப்படுகிறது