மேலும் அறிய
Advertisement
கொட்டும் மழையில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி - லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றி அவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவு கூறும் வகையில் உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் வைக்கப்பட்ட மாதா சுருபத்தை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ் புனிதம் செய்தார். அதனை தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா, 6 தேர்களில் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆரோக்கிய மாதா எழுந்தருளிய பெரிய தேரினை தோள்களில் சுமந்து சென்றனர். தேர் பவனி தொடங்கியதும் வேளாங்கண்ணி முழுவதும் மிதமான மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை பிரார்த்தனை செய்தனர்.
வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய பெரிய தேர்பவனி கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு, உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற தேர் பவனியை காண வெளிநாடு மற்றும், இந்தியாவில் உள்ள மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணி மாதாவை வேண்டிக் கொண்டு விழாவில் பங்கேற்றனர். ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் வேளாங்கன்னி மாதா விழா நிறைவு பெறுகிறது. இதில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் உள்ளிட்ட லட்சக்கணக்கான கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி மாதா பிறந்தநாள் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion