Koothandavar Temple: விழுப்புரம் அருகே விமரிசையாக நடந்த கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கூத்தாண்டவரை வழிபட்டு சென்றனர்.
விழுப்புரம்: ஒட்டம்பட்டு கிராமத்தில் ஆதி கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் ஓட்டம்பட்டு கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் மகாபாரதம் பஞ்சபாண்டவர் உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் திருநங்கைகள் தங்களது குலதெய்வமான ஆதிகூத்தாண்டவரை வழிபட்டு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஆதிகூத்தாண்டவர் இந்திர விமானத்தில் திருமண கோலத்தில் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருநங்கைகள் கழுத்தில் கட்டிய தாலிகள் அறுத்து கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்து அழுகை கோலம் நடத்தினர். வெகு விமரிசையாக நடைபெற்ற ஆதிகூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு அரவணை வழிபாடு செய்தனர்.
இதேபோல், அரகண்டநல்லூர் அருகே அருணாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் 516 ஆண்டு திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது குலதெய்வமான அரவணை வழிபட்டு தாலி கட்டிக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் 516 ஆண்டு பங்குனி உத்திர திருவிழா 15 நாட்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் பல்வேறு புராண நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து இன்று திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வை ஒட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து திருநங்கைகள் கலந்துகொண்டு தங்களது குலதெய்வமான அரவணை வழிபட்டு தாலி கட்டிக் கொண்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளின் எடைக்கு இணையாக எடைக்கு எடை காசுகளை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, நாளை தாலி அறுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து இந்திர விமானத்தில் திருமண கோலத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் ஆடு, கோழி பலியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. தாலி கட்டும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கூத்தாண்டவரை வழிபட்டு சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்