கந்த சஷ்டி; கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கரூர் நகர பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு சாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வடிவில் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகி சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்தில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பால முருகனுக்கு ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பாலமுருகனுக்கு பட்டாணி உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு கந்த சஷ்டி கவசம் நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலயத்தில் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளார்.