கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை
கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது
![கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை Karur Shivashakti Vinayagar Temple Fourth Annual Festival Thiruvilakku poojai - TNN கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/2a8bbf07bbb4bb5cabf1b7521cbc1af01707116453977113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு ஆலய மண்டபத்தில் 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் தங்களது இல்லத்தில் இருந்து விளக்குடன் ஆலயம் வருகை தந்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஆலயம் சார்பாக வாழை இலை, திருவிளக்கு பூஜைக்கு தேவையான எண்ணெய், திரி, மஞ்சள், குங்குமம், உதிரிப்பூ மற்றும் சூடம், பக்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் . அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வேத மந்திரம் கூறியபடி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. 1008 நாமாவளிகள் கூறிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கோ வம்ச கொங்கு வெண்டுவ குல பண்டாரத்தார்கள் குலதெய்வ சாமி கும்பிடும் விழா மற்றும் கருப்பண்ண சுவாமி பொங்கல் விழா.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அருகில் நங்காங்கி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆரியூர் செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி குலதெய்வ பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சோழசிராமணி காவிரி ஆற்றின் கரையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ,ஆரியூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ கருப்பணசுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் ஏராளமான பெண்கள் கருப்பண சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஆரியூர் ஸ்ரீ செல்லாண்டியம்மன், சோழசிராமணி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ கருப்பணசுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கோ வம்ச கொங்கு வெண்டுவ குல பண்டாரத்தார்கள் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)