கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் ஒன்பதாம் நாளில் சுவாமி ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா காட்சியளித்தார்.

கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஒன்பதாம் நிகழ்வு நாள் நிகழ்ச்சியில் சுவாமி ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா வந்தார்.

வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நாளான இன்று ஒன்பதாம் நாளில் சுவாமி ஆண்டாள் திருக்கோளத்தில் திருவீதி உலா காட்சியளித்தார். ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்று ஆலய வலம் வந்த பிறகு ஆண்டாள் சன்னதி அருகே மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆஞ்சநேயர் சன்னிதி அருகே துளசி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு திருவீதி உலா சிறப்பாக நிறைவு பெற்றது.

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இராப்பத்து பத்தாம் நாள் நிகழ்ச்சியில் ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து மற்றும் இராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பத்தாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு அபய பிரதான ரெங்கநாதசுவாமி உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க அபய பிரதான ரெங்கநாதன் சுவாமி திருவீதி உலா காட்சி அளித்தார். சொர்க்கவாசல் வழியாக இன்று பத்தாவது நாளாக சுவாமி வலம் வந்த பிறகு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆழ்வார் சன்னதியில் துளசியால் பல்வேறு அர்ச்சனைகள் நடைபெற்று தொடர்ந்து ஆழ்வாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதை தொடர்ந்து சுவாமிக்கும் கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்று, நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி இராப்பத்து பத்தாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து நாளை வைகுண்ட ஏகாதேசியின் இறுதி நிகழ்ச்சியாக ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.





















