கரூர் தேர் வீதிமாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை தங்க தேரோட்டம்
கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம்.
கரூரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்க தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக தங்க ரத வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
சுவாமிக்கு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி தொடர்ச்சியாக மகா தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் மேள தாளங்கள் முழங்கு ஆலய மண்டபத்திலிருந்து புறப்பட்ட மாரியம்மன் தங்க தேரோட்டம் ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அமாவாசை தங்க தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய முழுவதும் வரிசையில் நின்று தங்க தேரோட்ட நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாத வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கரூர் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டு அமராவதி தாய்க்கு 108 வகையான சீர் கொடுத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
உலக நன்மை வேண்டியும், தொடர்ந்து அமராவதி காவிரி உள்ளிட்ட ஆற்றுகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து வரவேண்டும் என்பதற்காகவும் ஆண்டுதோறும் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக ஆடி 18 பெருக்கை முன்னிட்டு அமராவதி தாய்க்கு 108 வகையான சீர் தட்டுகளை குழந்தைகள் கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற 108 வகையான சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கருவூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சீர்தட்டை எடுத்து வந்தனர் . அதன் தொடர்ச்சியாக கருப்பாயி கோவில் தெரு படிக்கட்டு துறையில் அமராவதி ஆற்றிற்கு தீப ஆலாத்தி மற்றும் சீர் தட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் உட்பட 12 நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அமராவதி தாய்க்கு 108 சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடங்கிபட்டி ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் செயலர் நீலகண்ட பிரியா அம்பா கலந்து கொண்டு சிறப்பித்தார். உலக நன்மை வேண்டி நடைபெற்ற நிகழ்ச்சியை காண ஏராளமான அப்பகுதி பொதுமக்கள் அமராவதி ஆற்றுக்கும் வந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.