மேலும் அறிய

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பிரதோஷம்: நந்திக்கு விசேஷ அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு  சிறப்பு அபிஷேகம் மற்றும் புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பிரதோஷம்: நந்திக்கு விசேஷ அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நந்தி பகவானே மனமுருகி வழிபட்டனர்.  அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிந்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பிரதோஷம்: நந்திக்கு விசேஷ அபிஷேகம்

தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.

புரட்டாசி மாதம் பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பிரதோஷம்: நந்திக்கு விசேஷ அபிஷேகம்

குறிப்பாக குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவதுடன் திருமுடி காணிக்கை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனையும் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேரோட்டம் மற்றும் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி பிரதோஷம்: நந்திக்கு விசேஷ அபிஷேகம்

இந்த ஆண்டு ஆலய பாலாலயம் பணி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள திருத்தேர் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை ஒட்டி தான்தோன்றி மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

தருமபுரம் ஆதீனத்தை சூழ்ந்த ஜப்பானியர்கள்..! இயற்கை சீற்றங்கள் நீங்க ஜப்பானில் சிறப்பு வழிபாடு..!
தருமபுரம் ஆதீனத்தை சூழ்ந்த ஜப்பானியர்கள்..! இயற்கை சீற்றங்கள் நீங்க ஜப்பானில் சிறப்பு வழிபாடு..!
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி... வீட்டில் சிலை வைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி... வீட்டில் சிலை வைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..
உங்க பகுதி விநாயகர் சிலை எப்படி இருக்கணும்? மாவட்ட ஆட்சியர் விதித்த 5 முக்கிய விதிகள் இதுதான்..
உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
CM Vijay: பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மீதான விஜய் அரசின் 18 அறிவிப்புகள் - என்னென்ன?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: கையை விட்டுப் போன தொகுதிகள்.. வசப்படுத்துமா அதிமுக? இடைத்தேர்தலில் என்ன செய்வார் இபிஎஸ்?
TN By Election 2026: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; நாளை மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடக்கம்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Morse Code என்றால் என்ன? புள்ளி, கோடு மூலம் செய்தி அனுப்பும் சுவாரஸ்யமான தகவல் தொடர்பு முறை!
Tata Harrier EV: ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
ஒரே சார்ஜில் 600 கிமீ ரேஞ்ச்.! பட்டையை கிளப்பும் டாடாவின் இவி SUV; விலை, அம்சங்கள் என்ன.? முழு விவரம்
Donald Trump: இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
இதெல்லாம் ரொம்ப ஓவர்.! ட்ரம்ப் முக வடிவில் ஈரான் வரைபடம்; Bye Bye Kharg எனவும் சர்ச்சைப் பதிவு
RE Classic 350 Mileage: ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
ஒரு முழு டேங்க் பெட்ரோல்ல கிளாசிக் 350 எவ்வளவு தூரம் போகும்.? வாங்குறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கோங்க
Embed widget