கரூரில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு தெய்வங்கள்.. விவரம்..
10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாக சொல்லப்படுகிறது.அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கரூர் விவிஜி நகர் பகுதியில் சுயம்பு வடிவில் எழுந்தருளில் அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் ஆலய ஆடி ஐந்தாம் வெள்ளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
கரூர் என்றாலே பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சிறப்பு வாய்ந்த ஊராக கருதப்பட்டு வரும் நிலையில் இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஒரு அதிசயம் என்பதற்கு இணங்க கரூர் மாநகராட்சிக்குட்பட்ட விவிஜி நகர் பகுதியில் ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் உருவாக்கி அதன் தொடர்ச்சியாக இன்று ஐந்தாம் வெள்ளியை முன்னிட்டு சுயம்பு தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அருள்மிகு சுயம்பு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, அருள்மிகு சுயம்பு ஸ்ரீ வாராகி அம்மன், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பிச்சாண்டவர், அருள்மிகு சுயம்பு ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஒரே கல்லிலான நான்கு சுயம்பு சுவாமிகளுக்கு எண்ணைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு,
திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆலய வாசலில் பிரத்தேகமாக அமைக்கப்பட்ட யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சுயம்பு தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.கரூர் விவிஜி நகர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிக்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்ல உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரே கல்லில் நான்கு சுயம்பு சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயம் குறித்து கோவில் நிர்வாகி தெரிவிக்கையில்... 10 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆலயம் சுயம்புமாக காட்சியளித்து வருவதாகவும் அடுத்த மாதம் ஆலய கட்டுமான பணி தொடங்கி ஓராண்டுக்குள் பணிகள் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாகவும் இதற்காக காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ச்சியாக நான்கு காலையாக வேண்டி நடைபெற்று பின்னர் மகா கும்பாபிஷேக நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்லப்படும் என ஆலய பூசாரி தெரிவித்துள்ளார்.