கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா
கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி உற்சவர் திருவீதி விழா நடைபெற்று வருகிறது.
கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி இரண்டாம் நாள் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி உற்சவர் திருவீதி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அபய பிரதான ரெங்கநாத சுவாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு
மேளதாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிம்மவாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை.
கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில் ஆலய மண்டபத்தில் முத்துமாரியம்மன், பகவதி அம்மன் ஊஞ்சல் உற்ச சேவை காட்சியளித்தனர் .
நிகழ்ச்சியை முன்னிட்டு முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் உற்சவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஊஞ்சலில் முத்துமாரியம்மன், பகவதி அம்மனையும் கொலுவிருக்க செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஊர் கொத்துக்காரர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக ஏற்பாடுகளை செய்தனர்.