![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் 3வது நாள் பகல் பத்து நிகழ்ச்சி
கரூர் ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் பகல் பத்து நிகழ்ச்சியில் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம்.
![கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் 3வது நாள் பகல் பத்து நிகழ்ச்சி karur Abaya Pradhan Ranganatha Swami Temple for the third day pakal paththu festival TNN கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் 3வது நாள் பகல் பத்து நிகழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/16/196922c8cf7ee1cb0457a1d847c477391702708504808113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மூன்றாவது நாளாக பகல் பத்து நிகழ்ச்சியில் சுவாமி அபய பிரதான ரெங்கநாதர் மற்றும் தாயார் திருவீதி உலா வந்தனர்.
வைகுண்ட ஏகாதேதியை முன்னிட்டு கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்றாம் நாள் பகல் பத்து நிகழ்ச்சியில் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி மற்றும் தாயாருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் ஸ்வாமிகளுக்கு வண்ண மாலைகள் அணிவித்த பின்னர் மேல தாளங்கள் முழங்க முதலில் அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயம் வலம் வந்தார்.
தொடர்ந்து ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயம் மண்டபம் வந்தடைந்த சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க தாயார் சுவாமி திருவீதி உலாவும் ஆலயம் வளம் வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்தில் அபய பிரதான ரங்கநாத சுவாமி மற்றும் தாயாருக்கு துளசியால் நாமாவளிகள் கூறி அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)