மேலும் அறிய

ராம நவமியை முன்னிட்டு நீலமேகப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராந்தக  சோழன் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்லவர்கால கட்டடிக் கலையுடன் கட்டப்பட்டகோவில்.

குளித்தலையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலமேகப் பெருமாள் திருக்கோவிலில் ராம நவமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

 கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராந்தக  சோழன் காலத்தில் கட்டப்பட்ட நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல்லவர்கால கட்டடிக் கலையுடன் கட்டப்பட்ட இக்கோவிலில் நீலமேகப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் காட்சியளித்து வருகிறார். இக்கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நேற்று நீலமேகப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து நேற்று மாலை அனுமந்த வாகனத்தில்  எம்பெருமான் புறப்பாடு நடைபெற்றது.

ராம நவமியை முன்னிட்டு  நீலமேகப் பெருமாள்  கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேகம் பெருமாள் ,  ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்ச்சையாக  நடைபெற்றது. திருக்கல்யாணம் உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர் பட்டர்கள் சுவாமி திருக்கரங்களில் வைத்த மாங்கல்யத்தினை அம்பாள் கழுத்தில் இட்டனர்.

 இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாணத்தினை முன்னிட்டு திருக்கல்யாண விருந்தும் அளிக்கப்பட்டது.

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இரவு நடைபெற்ற சுவாமி திருவீதி உலாவில்  ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆண் பூத வாகனத்திலும்,  அலங்காரவல்லி அம்பிகை பெண் பூத வாகனத்திலும் காட்சியளித்தனர். ஆலய மண்டபத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா ஆலய கிழக்கு வாசல், வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் வழியாக முக்கிய வீதியில் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

ராம நவமியை முன்னிட்டு  நீலமேகப் பெருமாள்  கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கல்யாண பசுபதீஸ்வரர் பங்குனி உத்திர சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராமநவமையை முன்னிட்டு சுவாமி திருவீதி விழா நடைபெற்றது.

ராமர் பிறந்த நாளை பல்வேறு ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் ராமநவமி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ராம நவமியை சாமி திருவிழா நடைபெற்றது.

ராம நவமியை முன்னிட்டு  நீலமேகப் பெருமாள்  கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்கள் அபிஷேகம் நடைபெற்று பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு ரத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

வீதியில் வழியாக வலம் வந்த ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் சுவாமிகள் பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து தேங்காய்,பழம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஆலயத்தில் வந்த சுவாமிக்கு ஆலாத்தி எடுக்கப்பட்டு, ஸ்வாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கரூர் பசுபதி ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற ராமநவமி திருவீதி உலா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?Siddaramaiah Shoes Video : முதல்வரின் அதிகார திமிர்..காங். மரியாதைக்கு வேட்டு தேசிய கொடிக்கு கலங்கம்ADMK Vs AMMK : ’’யார் பெருசுனு அடிச்சு காட்டு!’’ Jayakumar vs TTV Dhinakaran..வம்பிழுத்த ஆதரவாளர்கள்Gambhir plan for Ruturaj |”நீ அடிச்சி ஆடு ருதுராஜ்”கம்பீர் MASTER STROKE அலறும் AUSSIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
இஸ்ரேலுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா.! ஈரானுக்கு ஆதரவாக வந்த ரஷ்யா: பதற்றத்தில் பிராந்தியம்: அடுத்து என்ன?
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
Breaking News LIVE OCT 2 :விசிக மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் பேச்சு
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
”காந்தி மண்டபத்தில் ஆளுநர் கண்களுக்கு மதுபாட்டில் தெரிந்திருக்கிறது ” அமைச்சர் ரகுபதி ரியாக்ட்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
Vettaiyan Trailer : ஹண்டர் வந்துட்டார்... வெளியானது ரஜினியின் வேட்டையன் பட டிரைலர்
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
வெள்ள நீரில் தரையிறங்கிய இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சிகள்.!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி  ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
GST Collection: செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி.வரி ரூ.1.73 லட்சம் கோடி வசூல்!
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட  23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
அமைச்சர் பொன்முடியுடன் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதம் - கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
Embed widget