உசிலம்பட்டியில் வெகுவிமர்சையாக நடந்த கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோயிலின் உற்சவ திருவிழா - விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூஜைப்பாறை பெருமாள் கோயில்., இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குனி உற்சவ திருவிழா ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
மதுரை உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோயிலின் உற்சவ திருவிழா - விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.@SRajaJourno | #abpnadu | #Madurai pic.twitter.com/vVpE5kIXVG
— arunchinna (@arunreporter92) April 15, 2023


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















