மேலும் அறிய

Vaikasi Brahmotsavam : கொண்டாட தயாராகி விட்டீர்களா? துவங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

Kanchipuram Varadaraja Perumal Brahmotsavam 2024: வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

வைகாசி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம்  மே 22-ஆம் தேதியும், திருத்தேர் உற்சவம் மே 26-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

கோயில் நகரம் காஞ்சிபுரம் ( Temple City Kanchipuram ) 

உலகப் பிரசித்திபெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் (Kanchipuram Varadharaja Perumal Temple) உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வருடம் முழுவதும் 200 நாட்களுக்கு குறையாமல் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
 
அந்த வகையில், மிகவும் பிரசித்தி பெற்ற "வைகாசி பிரம்மோற்சவ விழா" ( Vaikasi Brahmotsavam 2024 ) நடைபெற உள்ளது.

Vaikasi Brahmotsavam : கொண்டாட தயாராகி விட்டீர்களா? துவங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

 வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்ற விழா

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவிலின் மூலவர் பகுதியில் இருந்து உற்சவர் ஆன வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் கொடி மரத்தில் அருகே பக்தர்களுக்கு காட்சியளித்த பின் கருட முகம் பொறித்த பிரம்மோற்சவத்தின் கொடி பட்டச்சாரியார்கள் மந்திரங்கள் பாட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Vaikasi Brahmotsavam : கொண்டாட தயாராகி விட்டீர்களா? துவங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

" கோவிந்தா கோவிந்தா "

கொடியேற்ற விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என முழக்கமிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகரில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இருக்கக்கூடிய வைகாசி பிரம்மோற்சவம் துவங்கி இருப்பது காஞ்சிபுரம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

Vaikasi Brahmotsavam : கொண்டாட தயாராகி விட்டீர்களா? துவங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
 
அலங்காரம் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். குறிப்பாக கோடை விடுமுறை நாட்களில், இந்த உற்சவம் நடைபெற உள்ளதால்  நாள்தோறும் நடைபெற இருக்கும் காலை மற்றும் மாலை உற்சவங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள் நடைபெறும் தேதி-  உற்சவம்  என்னென்ன ?

மே மாதம் 22 ஆம் தேதி ( 22- 05-2024 ) :  திருவிழாவிற்கு மிக முக்கிய உற்சவம் மாத இருக்கக்கூடிய  கருட சேவை (Kanchipuram varadharaja perumal temple garuda sevai) மற்றும் கோபுர தரிசனம்  உற்சவம்  நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு  அத்திகிரி மலையில் இருந்து சுவாமி  புறப்பாடு நடைபெறுகிறது, தொடர்ந்து  கருட வாகனத்தில் பக்தர்களுக்கு  காட்சியளிக்கிறார். அன்று இரவு உற்சவம் அனுமந்த வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார்.

Vaikasi Brahmotsavam : கொண்டாட தயாராகி விட்டீர்களா? துவங்கியது வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

மே மாதம் 26-ஆம் தேதி (26- 05-2024) :  விழாவின் பிரதான திருவிழா  திருத்தேர் உற்சவம்  நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில் உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருதல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக  திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் மாலை  உற்சவம் கிடையாது.

மே மாதம் 28-ஆம் தேதி (28- 05-2024) : ஆள்மேல் பல்லாக்கு ( மட்டை அடி உற்சவம் ) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget