Kanchipuram Ther: வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்.. விழாக்கோலத்தில் காஞ்சிபுரம்.. குவிந்த பக்தர் கூட்டம்
kanchipuram varadharaja perumal ther: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்ம உற்சவம் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ராஜ அலங்கார திருக்கோளத்தில் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்ம உற்சவம் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரதராஜ பெருமாள் காலை, மாலை என இருவேளைகளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் உற்சவம்
அந்த வகையில் பிரம்ம உற்சவத்தின் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதனை ஒட்டி இன்று 17-ஆம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது. திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் தேவாதி ராஜன் திருக்கோளத்தில், வரதராஜா பெருமாள் எழுந்தருளி ராஜநடையில் கோவிலில் இருந்து, காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதிக்கு வருகை தந்து, தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
கோவிந்தா கோவிந்தா என்ன கோஷம்
65 டன் எடையும் 73 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட திருத்திறனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷமிட்டவாரு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மேலும், திருத்தேரானது, காந்தி சாலையில் புறப்பட்டு மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம் மற்றும் நான்கு ராஜ வீதியில் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்து அடைவார்.
திருத்தேர் உற்சவத்தை ஒட்டி உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் கோவிந்துள்ளதால், காஞ்சிபுரம் மாநகர பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறன்றனர். திருத்தேர் உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குவிந்த பக்தர்கள் கூட்டம்
மேலும் திருத்தேர் வரும் வழியெங்கிலும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இன்று விடுமுறை நாள் என்பதாலும், பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதால், பெருமானின் பேரருளைப் பெற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை காண வந்து கொண்டே இருக்கிறார்கள்.
வரதராஜ பெருமாள் கோவில் தேரின் சிறப்பம்சம் என்ன ?
வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேருக்கு 6 சக்கரங்கள் உள்ளன, சுமார் 65 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேராக உள்ளது. நான்கு சக்கரங்கள் இரும்பு சக்கரமாக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. சுமார் 79 அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட பெயராக உள்ளது. அகலம் சுமார் 35 அடி உள்ளது. தேர் முழுவதும் பெருமாளின் 9 அவதாரங்களும் மர சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவதைகளின் சிற்பங்கள், விநாயகர் அம்மன் போன்ற கடவுள்களின் சிற்பங்களும் தேரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில் ஒன்றாக இந்த தேர் விளங்குகிறது. இந்த தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு அம்சம். தமிழ்நாட்டில் இருக்கும் பல பிரம்மாண்ட தேர்களில் பீடம் வரை மட்டுமே மரத்தால் வடிவமைக்கப்படும், அதன் பிறகு மூங்கில் அல்லது சவுக்கு கட்டைகள் மூலம் கட்டப்படும். ஆனால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெயர் முழுவதும் மரத்தால் செய்யப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பம்சம். இது போன்ற மரத்தால் கட்டமைக்கப்பட்ட சிறிய தேர்கள் உள்ளன. ஆனால் பெரிய தேர்களில், மரத்தால் கட்டமைக்கப்பட்டிருப்பது காஞ்சிபுரத்தில் தான்.





















