மேலும் அறிய

வந்துவிட்டது அடுத்த திருவிழா! காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் எப்பொழுது?

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் உற்சவம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவ ஆலயங்களில் ஒன்றாக வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. முனிவர்கள் மற்றும் தேவர்கள் இடையே வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்து குறித்து சந்தேகம் எழத் துவங்கியது. இதன் காரணமாக இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட துவங்கியது.

காஞ்சிபுரம்  வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேஸ்வரர் கோயில்

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். வழிபாடு செய்தபொழுது நேரில் தோன்றிய இறைவன் அவர்களுடைய வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவில் இருக்கும் சிவபெருமானுக்கு, "வழக்கறுத்தீஸ்வரர் " என பெயர் பெற்றது. இக்கோயிலில் சத்தியம் செய்ய சொல்வார்கள், இக்கோயிலில் பொய் சத்தியம் செய்தால் அவர்களுடைய குடும்பம் விருத்தி ஆகாது என்பது நம்பிக்கை. இதனால் இக்கோயிலில் பொய் சத்தியம் செய்ய தவறு செய்தவர்கள் பயந்து உண்மையை கூறி விடுவார்கள்.

பிரம்மோற்சவ திருவிழா 

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உற்சவம் வருகின்ற ஜூலை மாதம் ஏழாம் தேதி துவங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் உற்சவம் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை வேலைகளில் அம்பிகையுடன் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா வர உள்ளார். விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் ஜூலை மாதம் 13ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

எந்தெந்த தேதியில் என்னென்ன உற்சவம் ?

ஜூலை மாதம் ஏழாம் தேதி - காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

ஜூலை மாதம் எட்டாம் தேதி - காலை சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மாலை வேளையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி - காலை பூத வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மாலை வேளையில் ராவணேஸ்வரர் வாகனத்தில் காட்சியளிக்கிறார்


ஜூலை மாதம் பத்தாம் தேதி - காலை நாக வாகனத்திலும், மாலை வேளையில் ரிஷப வாகனத்திலும் சாமி காட்சியளிக்கிறார்.

ஜூலை மாதம் 11ஆம் தேதி - காலை அதிகார நந்தி வாகனமும், மாலை வேளையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

ஜூலை மாதம் 12ஆம் தேதி - காலை உற்சவம் கிடையாது. மாலை வேளையில் யானை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.

ஜூலை மாதம் 13ஆம் தேதி - மகா ரதம் திருதேரோட்டம் நடைபெறுகிறது.

ஜூலை மாதம் 14ஆம் தேதி - மாலை வேளையில் குதிரை வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.

ஜூலை மாதம் 15 ஆம் தேதி - காலை வேளையில் திருப்பல்லாக்கும் மற்றும் மாலை வேளையில் கற்பக விருச்சகம் காமதேனு வாகனத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார்.


ஜூலை மாதம் 16ஆம் தேதி - நடராஜர் புறப்பாடு காலை நடைபெறுகிறது. மாலை வேளையில் ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சளிக்கிறார்.

ஜூலை மாதம் 17ஆம் தேதி - காலை கேடயம், தொடர்ந்து மாலை வேளையில் நூதன கண்ணாடி விமானம் வாகனத்தில் சுவாமி காட்சியளிக்கிறார்.

ஜூலை மாதம் 17ஆம் தேதி - மாலை பஞ்சமூர்த்தி வாகனத்தில் இரவு உற்சவம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 19ஆம் தேதி - தீர்த்தவாரி நடைபெறுகிறது

 

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget