மேலும் அறிய

Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..

சிவப்பு வண்ண பட்டு உடுத்தி ஆண்டாள் கொண்டையுடன் கையில் கிளி ஏந்திக்கொண்டும், வைரம்,வைடூரியங்கள் ஜொலி ஜொலிக்க, பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சியம்பாள்

உலக பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான  காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி  காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் கடந்த 25ந் தேதி முதல்  தொடங்கி வருகின்ற 05ந் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு தினந்தோரும் விஷேச அபிசேக அலங்காரங்களும், நவாவர்ண பூஜை,கன்யா பூஜை,ஸுவாஸ்னி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் நாள்தோறும் கோவில் உட்புற வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் எழுந்தருளி சுரஸம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி  விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..
 
நவராத்திரி
 
இந்நிலையில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஆறாம் நாள் விழாவில்,கோவில் உற்சவர் சன்னதியில் இருந்து காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாள் சிவப்பு வண்ண பட்டு உடுத்தி ஆண்டாள் கொண்டையுடன் கையில் கிளி ஏந்திக்கொண்டும் வைரம்,வைடூரியங்கள் ஜொலி ஜொலிக்க ரோஜா பூ,விலுச்சை பூ,செண்பகப் பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு லட்சுமி,சரஸ்வதியினருடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு கோவில் உட் பிரகாரத்தில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அங்கு அம்பாளுக்கு பல்வேறு வேத பாராயணங்கள் முழங்கியப்பின்  காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மபாள் நரகாசுரனை  சூரஸம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் கட்டப்பட்டு  அங்கு கூடியிருந்த திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் கண்டுகளித்து காமாட்சியம்பாளை  தரிசித்து சென்றனர்.

Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி  விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..
 
மேலும் நவராத்திரி மண்டபத்தில் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் உற்சவர் தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருள இருபுறங்களிலும்  வைக்கப்பட்டுள்ள ராமாயணம்,மகாபாரதம் இதிகாசங்கள் மற்றும் பல்வேறு புராண கதைகளை நினைவுப்படுத்தும் விதமான கொலு  பொம்மைகளை உள்ளூர் மற்றும் ஆந்திரா,கேரளா,பெங்களூர் போன்ற வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் கண்டு கழித்தும்,  காமாட்சியம்பாளை  தரிசித்தும் அம்பாளின் பேரருளை பெற்று சென்றது. மேலும் இந்த 6-ஆம் நாள் நவராத்திரி விழாவையொட்டி விநாயகர்,சிவபெருமான்,காளி வேடங்கள் போன்ற பல்வேறு வேடங்கள் தரித்து வாத்தியங்கள் முழங்க இதற்கு ஏற்றவாறு கலைஞர்களின் நடனம் அங்கிருந்தோரை கவிர்ந்திழுத்துடன் அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
 
Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி  விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..
 
காஞ்சி காமாட்சி வரலாறு :
 
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.
 
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.
 
Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி  விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

Navratri : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி  விழா: மெய்சிலிர்த்த பக்தர்கள்..
 
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப்பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget